ஸ்ரீநகர்:
காஷ்மீரில் அனைத்து கட்சி குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துவைக்க அனைத்துக்கட்சி குழு காஷ்மிரில் முகாமிட்டுள்ளது. அவர்களுடன்  இதுவரை எந்த அமைப்பும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  அரசு அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1aKasmsir
காஷ்மீரில் கடந்த ஜூலை 8ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி பர்கான் வானி கொல்லப்பட்lதை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது. தொடர்ந்து வன்முறை, துப்பாக்கி சூடு, கலவரம், கடையடைப்பு, கண்ணீர் குண்டு என கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இதுவரை நடைபெற்ற வன்முறையில்  71 பேர் வரை உயிரிழந்தனர்.
வன்முறை ஆரம்பம் ஆகி இரண்டு மாதம் ஆகியும் இன்னும் இயல்பு நிலைக்கு மக்கள் வரமுடியவில்லை. இதையடுத்து காஷ்மீரில் அமைதி திரும்ப மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டன.
இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தி அனைத்துக்கட்சி குழுவை கூட்டினார்.
இதைத் தொடர்ந்து காஷ்மீரில் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ராஜ்நாத் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு காஷ்மீர் சென்றுள்ளது. அனைத்து கட்சிகள் மற்றும் பிரிவினைவாத குழு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனைத்துக்கட்சி குழுவினர் அழைப்பு விடுத்தனர். ஆனால், பெரும்பாலான பிரிவினைவாத குழுக்கள் மத்தியக்குழுவின் அழைப்பை ஏற்கவில்லை. பேச்சு வார்த்தைக்கு வரவில்லை.
குல்காம், பல்போரா, லோலாப் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமானோர் திரண்டு  அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதில் பெண்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது அனைத்து கட்சி குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் பல்வேறு இடங்களிலும் போராட்டம்  நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் ஆனந்த்நாக் மற்றும் சோபியான் மாவட்டங்களில் மீண்டும் கலவரம் வெடித்தது. பாதுகாப்பு வீரர்கள் தாக்கியதில் பலர் காயமடைந்து உள்ளனர். சோபியான் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். உடனடியாக தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். காஷ்மீரில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதுகுறித்து குலாம் நபி ஆசாத் கூறுகையில்
Ghulam_Nabi_Azad
‘‘மத்தியக் குழு ஒவ்வொருவரையும் சந்திக்க முயற்சி செய்தது. ஆனால், அரசுதான் அவர்களை அடையாளம் காண வேண்டும். பேச்சுவார்த்தை முழுமையான முடிவை கொடுக்கவில்லை. ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட்டு சாதகமான முடிவு எடுக்கப்படும்.
காஷ்மீர் விவகாரத்தில் ஒவ்வொருவரும் தீர்வு காண விரும்புகிறார்கள். காஷ்மீர் சூழ்நிலையால் நாட்டின் ஒவ்வொருவரும் கவலை அடைந்துள்ளனர். சில நண்பர்கள் ஹூரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினார்கள். ஆனால், சில இடங்களில் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை முடிந்தது. சில இடங்களில் அவர்கள் பேச்சுவார்தைக்கு வரவில்லை. நாங்கள் சென்ற பயணம் இன்னும் முடியடையவில்லை. சந்திப்புகள் சென்று கொண்டிருக்கின்றன’’ என்றார்.