“சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தர்மதுரை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அப்படத்திற்காக வாங்கிய ஊதியத்தில் பாதியை ஏழைக்குழந்தைகள் நலனுக்காக அளித்துவிட்டார்” என்று ஒரு பதிவு, கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் பரவி வந்தது.
b
இந்த பதிவை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட விஜய் சேதுபதி, “இந்த செய்தி உண்மையல்ல.. மன்னிக்கவும்” என்று தெரிவித்திருக்கிறார்.
தங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யாத உதவிகளை செய்ததாக சொல்பவர் பலர் உண்டு. அதுவும் திரைத்துறையில் அதிகம்.
ஆனால் தவறாக பரவிய பதிவை தனது பக்கத்தில் பதிந்து அதற்கு விளக்கும் கொடுத்திருக்கும் விஜய் சேதுபதி கிரேட்தான்!