“கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு…” என்று பொதுவாக சொல்வார்கள். இன்று உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெண்களின் அழகை மெருகேற்றி கொள்ள பல்வேறு அழகு பொருட்கள் (Cosmetics) வந்துவிட்டன. அவ்வற்றில் ஒன்றை கூட பயன்படுத்தாத பெண்ணே உலகில் 99% இல்லை எனலாம். ஆனால் அவ்வாற்றின் தீமைகளை அறியாதவர்களே பெரும்பாலானோர். இங்கே உள்ள இந்த படத்தை பார்த்தபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
ஷாம்பூ: இவற்றில் 15 விதமான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Sodium Lauryl Sulphate, Tetrasodium and Prophylene Glycol ஆகியவை.இதை பயன்படுத்துவதனால் வரும் பக்க விளைவுகள்: கண்களிலும் தலையிலும் எரிச்சல் மற்றும் கண்கள் சேதமடைய வாய்ப்பு உண்டு.
கண் புருவ மை: இதில் 26 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Polythylene Terephthalate ஆகும்.
இதை பயன்படுத்துவதனால் வரும் பக்க விளைவுகள்: பெண்களுக்கு மலட்டுத்தன்மை, ஹோர்மோன்கள் சுரப்பதில் தடைகள், உடல் உறுப்புகள் பாதிப்பு, தோல் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.
லிப்ஸ்டிக்: இதில் 33 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Polymenthyl Methacrylate ஆகும்.
இதை பயன்படுத்துவதனால் வரும் பக்க விளைவுகள்: ஒவ்வாமை, புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்
நக மேற்பூச்சு: இதில் 31 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Phthalates ஆகும். இதை பயன்படுத்துவதால் பெண்கள் கருத்தரிப்பதிலும் குழந்தை வளர்ச்சியிலும் பாதிப்புகள் ஏற்படும்.
நறுமண தைலம்: இதில் 250 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Benzaldehyde, Benzyl Alcohol, Benzyl Acetate ஆகும். மற்ற அழகுசாதன பொருட்களை விடவும் Perfume பயன்படுத்துவது மிகவும் தீமையானது. இதை பயன்படுத்துவதால்
1. கண்கள், வாய், தொண்டை போன்ற இடங்களில் எரிச்சல் இருக்கும்.
2. சிறுநீரகம் பழுதடைய வழிவகுக்கிறது.
3. பயன்படுத்துபவர்கள் எந்த நேரமும் அசாதாரண நிலையிலேயே காணப்படுவார்கள்.
தோல் ரோமம் நீக்கி(Fake tan): இதில் 22 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Ethyl Paraben, Methyl Paraben, Prophyl Paraben ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், ஹோர்மோன் (Thyroid) சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
ஹேர் ஸ்ப்ரே: இதில் 11 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Octinoxate, Isophthalates ஆகும். இதை பயன்படுத்துவதால் ஒவ்வாமை, கண், மூக்கு, தொண்டை பகுதிகளில் எரிச்சல், ஹோர்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். உடலின் செல்கள் பழுதடைய வழிவகுகிறது.
BLUSHER: இதில் 16 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Ethyl Paraben, Methyl Paraben, Prophyl Paraben ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், ஹோர்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
FOUNDATION: இதில் 24 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Polymethyl Methacrylate ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக பாதிக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும்.
டியோரண்ட்: இதில் 15 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Isoprophyl Myrislate, ‘Parfum’ ஆகும். இதை பயன்படுத்துவதால் தோளில், கண்களில் எரிச்சல்; நுரையீரல் பாதிப்பு, மூச்சு விடுவதில் பிரச்சனைகள்; பலவிதமான தலைவலிகள், மயக்கம் ஏற்படும்.
பேபி ஷாம்பு: குழந்தைகளுக்கான ஷாம்பூவில் மிருதுதன்மைகாக 1,4-dioxane இருக்கிறது. அது குழந்தைகளுக்கு புற்றுநோய் வர வழிவகுக்கிறது.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக்குறிவைத்தன – உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும் உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப்பெண்களை கவிழ்த்தன.
1994, 1996, 1997, 1999, 2000 ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகுசாதனப்பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது.
2000த்திற்க்குப்பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை. காரணம் இனி இந்தியப்பெண்கள் அழகு சாதனப்பொருட்களை கைவிடமாட்டார்கள் என்று புரிந்துக்கொண்டதால் ஆப்ரிக்க, தென்அமெரிக்க நாட்டுப்பெண்களை கவர சென்றுவிட்டார்கள்.
இனி பெண்களே உங்கள் வாழ்வில் இத்தகைய அழகு (தீமை தரும் அசிங்கமான) பொருட்களை திரும்பியும் பார்க்க வேண்டாம், ஹீலர்.
ஹீலர் ஜி.கிரிதரன்