தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து எழுதப்பட்ட “அம்மா” என்ற ஆங்கில புத்தகம் ஜெயலலிதாவின் கோர்ட்டில் பெற்ற தடையை மீறி வெளியானது. இன்று இந்தியா முழுதும் கடைகளில் கிடைக்கிறது.

புத்தகத்தின் முன் அட்டை
புத்தகத்தின் முன் அட்டை

பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வாசந்தி, தமிழகமுதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பற்றி ஆங்கிலத்தல், “அம்மா” (AMMA  ) என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். ஜெயலலிதாவின் பள்ளித்தோழிகளில் ஆரம்பித்து, அரசியலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு எதிரான கருத்துடைய அரசியல் பிரமுகர்கள், பத்தரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரை சந்தித்து கருத்துக்களை தொகுத்தார் எழுத்தாளர் வாசந்தி.
இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், பத்திரிகையாளர் சோலை ஆகியோரின் பேட்டிகள் வெளியாகி உள்ளன. பல வரலாற்றுத் தகவல்களை அளித்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்  புத்தக ஆசிரியர் வாசந்தி.
புத்தகத்தின் பின் அட்டை
புத்தகத்தின் பின் அட்டை

2010ம் ஆண்டு இந்த புத்தகத்தை எழுதத் தொடங்கி 2011ம் ஆண்டு எழுதி முடித்தார். அடுத்த ஆண்டு (2012)ம் ஆண்டு இந்த புத்தகத்தை பிரபல பெங்குவின் பதிப்பகம் வெளியிட திட்டமிட்டது. சுமார் 50 ஆயிரம் பிரதிகள் அச்சடித்தது.
இந்த நிலையில், “புத்தகத்தை வெளியிடக்கூடாது” என்று பெங்குவின் பதிப்பகத்துக்கு எதிராக ஜெயலலிதா கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். விசாரணை முடிவில், புத்தகத்தை வெளியிட பெங்குவின் பதிப்பகத்துக்கு கோர்ட் தடை விதித்தது.
கடைகளில் புத்தகம்
கடைகளில் புத்தகம்

இந்த நிலையில் வேறு பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இன்று கடைக்கு வந்துள்ள “அம்மா” புத்தகம், இந்தியா முழுதும் கிடைக்கிறது.
“தன்னைப்பற்றிய “அம்மா” புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிடக்கூடாது” என்றுதான் ஜெயலலிதா தடை வாங்கியிருக்கிறார். ஆகவே வேறு பதிப்பகம் வெளியிடுவது சட்டப்படி தவறல்ல” என்று ஒரு சாரார் தெரிவிக்கிறார்கள்.
புத்தகத்தை எழுதிய வாசந்தி
புத்தகத்தை எழுதிய வாசந்தி

அதே நேரம், “பதிப்பகம் குறித்து ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்திருக்காது. தன்னைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்காகத்தான் தடை வாங்கியிருப்பார். ஆகவே வேறு பதிப்பகம் அதே புத்தகத்தை வெளியிட்டதும் சர்ச்சைக்குரியதே” என்று இன்னொரு தரப்பாரும் தெரிவிக்கிறார்கள்.