திரைப்பட தயாரிப்பாளர் மதன் காணாமல் போன விவகாரம் மற்றும் மருத்துவக்கல்லூரி சீட் வழங்குவதாக கூறி பணம மோசடி செய்தது ஆகிய புகார்களை அடுத்து பச்சமுத்து இன்று மதியம் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி சைதாப்பேட்டை நீதிமன்றம் கொண்டு சென்றபோது, தனக்கு உடல் நிலை சரியில்லை என்று பச்சமுத்து தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

பொதுவாக கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜ்ர் படுத்தப்பட்டு பின்னர் மருத்துவமனையில் பரிசோதனை முடித்து சிறைக்கு அனுப்பபடுவர். ஆனால் கோர்ட்டுக்கு போகும் வழியிலேயே பச்சமுத்து, கடந்த பத்து நாட்களுக்கு முன்னர், தான் இதய நோய் பிரச்சனைக்காக ஆஞ்சியோகிராம் செய்ததாகவும், தற்போது நெஞ்சுவலி இருப்பதாகவும் பச்சமுத்து தெரிவித்ததால் ராயபேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்களிடம் அவர், நெஞ்சு வலி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று கூறவே உடனடியாக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவரை இதய நோய் பிரிவு மருத்துவர்கள் சோதனை செய்தனர்.
மருத்துவ அதிகாரிகள் கொடுக்கும் பரிசோதனை முடிவை பொறுத்தே சிறைக்கு செல்வதா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவாரா எனபது முடிவாகும்.
“உடல் நலமின்மையை காரணமாகச் சொல்லி மருத்துவமனையிலேயே பச்சமுத்துவை வாக்கும் ஏற்பாடு நடக்கிறது” என்று ஒரு செய்தி உலா வந்ததை ஏற்கெனவே பத்திரிகை டாட் காம் இதழில் வெளியிட்டுள்ளோம்.
Patrikai.com official YouTube Channel