முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் கொடுத்து அனுப்பியது அரசியல்வட்டாரத்தில் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்தித்து தனித்த போட்டியிட்டது பா.ம.கட்சி. மேலும், அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகளை அக் கட்சி நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சட்டமன்ற காட்சிகள், , காவல்துறை மானிய கோரிக்கை, முதல்வரின் 110 அறிவிப்பு ஆகியவற்றையும் கடந்த சில நாட்களில் கடுமையாக குறை கூறினார் ராமதாஸ்.

இந்த நிலையில் நேற்று மாலை பாமக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான ர் பாலு, தனது ஆடி காரில் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்துக்கு வந்தார். வீ்ட்டினுள் சென்று சிறிது நேரத்துக்குப் பிறகு வெளியே வந்த பாலுவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “ அய்யா (ராமதாஸ்) ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார் அதை முதலமைச்சரிடம் ஒப்படைத்தேன் மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறிச்சென்றார்.

அரசியல் வானில் எதிரெதிர் திசையில் பயணிக்கும் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் இணைந்து செய்லபடுமா என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது. குறிப்பாக, வரும் உள்ளாட்சி தேர்திலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel