முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும்,வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்திற்கு சாரதா ஃசிட்பண்ட் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“நளினி சிதம்பரம் விசாரணை அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டும். அடுத்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்படும் தேதியில் அவர் நேரில் ஆஜராகி சாரதா ஃசிட்பண்ட் நிதி மோசடி வழக்கு தொடர்பாக தனது வாக்குமூலத்தை அவர் அளிக்க வேண்டும். அந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel