சென்னை:
அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவது கிடையாது. தாமதமாக வந்தாலும், மறு நாள் வந்தாலும் அதற்கு தகுந்தார்போல் வருகை பதிவேட்டை திருத்திக் கொள்வது வாடிக்கை.
இதுபோன்ற செயல்களை தடுக்க அரசு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ எனப்படும் ‘விரல்ரேகை பதிவு’ வருகை பதிவேட்டை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை சட்டசபை யில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை கையாளுவதில் தற்போது உள்ள கையெழுத்திடும் முறையை மாற்றி, பயோமெட்ரிக் முறையில் வருகைபதிவு செய்யும் புதிய முறை கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக 45.57 கோடி ஒதுக்கபடுவதாக அறிவித்துள்ளார்.
பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்யும் போது, குறித்த நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே போல் பள்ளி முடிந்து செல்லும்போது கைரேகையை வைத்து பதிவு செய்யும் நிலை இருப்பதால், நினைத்த நேரத்திற்கு பள்ளியை விட்டு கிளம்பவும் முடியாது.
மேலும் வருகைநேரத்தை தாண்டி வருகைப்பதிவேட்டில் பதிவு செய்தால், அவர்களது ஊதியம் குறையும் வாய்ப்பு இருப்பதால், கால தாமதத்தை இனி தொடர முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பெரும்பாலான அரசு நிறுவனங்களிலும், ஒரு சில பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு அனைத்து அரசு பள்ளிகளிலும் இம்முறை அமல்படுத்துவதை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்று உள்ளனர்.
அதேபோல குறைந்தது 5 வருடங்களுக்கு மேல் ஒரே பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர்களையும் பணிமாற்றம் செய்வார்களா என பெரும்பாலான பெற்றொர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அதேபோல்த, பெரும்பாலான தலைமையாசிரியர்கள் பொதுவாக பள்ளிகளுக்கு சரியாக வருவதுமில்லை, வந்தாலும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு, கல்வி அதிகாரி மீட்டிங் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறார்கள். இதுபோன்ற செயல்களுக்கும் தகுந்த நடவடிக்கை தேவை என பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும், பயோ மெட்ரிக் கருவியில், வருகையை பதிவு செய்து விட்டு, ஆசிரியரோ, மாணவரோ, பள்ளியிலிருந்து வெளியே சென்று விட்டு, மாலையில் வந்து மீண்டும் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. இதுபோன்ற செயல்களை கண்காணிக்கும் வகையில், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்களும், சமுக ஆர்வல்ர்களும் எதிர்பார்க்கிறார்கள்.