கவுகாத்தி:
சாம் மாநில பாரதியஜனதா கட்சியின் துணைத்தலைவர் மகனை அசாம் உல்பா தீவிரவாதிகள்  கடத்தி, 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த அசாமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடத்தப்பட்ட சிறுவனை கடந்த 20 நாட்களுக்கு மேலாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது உல்பா தீவிரவாதிகளிடம் இருந்து தகவல் வந்துள்ளது.
ulfa
அசாம் மாநிலம் பாஜக துணைத் தலைவர் ரத்னேஸ்வர் மோரான். இவரது மகன் குல்தீப். சம்பவத்தன்று அருணாச்சல பிரதேசம்  நாம்பாங்கில் பகுதியில் தங்கியிருந்த இருந்த குல்தீப்பை கடந்த 1ந்தேதி  உல்பா தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
பல இடங்களில் தேடியும் குல்தீப் கிடைக்காத நிலையில், தற்போது உல்பா தீவிரவாதிகள் வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில் குல்தீப்பை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
வீடியோவில் கடத்தப்பட் குல்தீப் பேசும் காட்சி வெளியாகி உள்ளது.
அதில் பேசிய குல்தீப், என் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பணயத் தொகையை கொடுத்து தன்னை அம்மா, அப்பா, முதல்-மந்திரி மீட்க வேண்டும் என்று கோரி உள்ளார்.
வீடியோ இணைப்பு
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/08/The-Quint_-ULFA-Realeases-Video-of-Abducted-BJP-Leader’s-Son.mp4[/KGVID]
இதுகுறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அசாமில் பாரதியஜனதாவின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.