மும்பை:
லகிலுள்ள ஒவ்வொரு விசயமும் பரிணாம வளர்ச்சி உட்படுகின்றன. இதில் விலங்குகளோ கண்டுபிடிப்புகளோ சித்தாந்தங்களோ என அனைத்தும் அடங்கும். இந்த பரிணாமம் மாட்டு அரசியலுக்கும் விதிவிலக்கல்ல.
முதலில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை கொன்றார்கள். பின்னர் இறந்த மாட்டின் தோலை உரித்தவர்களை தாக்கினார்கள், இப்போது அவர்கள் மாட்டு தோலில் செய்யப்பட்ட பொருள்களை உபயோக்கிப்பவர்களை விட்டு வைக்கவில்லை.
பசு நேசர்களின் பார்வை தற்பொழுது தோல் பை வரை பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆம், அஸ்ஸாமை சேர்ந்தவர் பரூன். இவர் மும்பையில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை செய்து கொண்டு இருக்கிறார்.
“என்றும் போல் அன்றைய தினமும் தொடங்கியது , அலுவலகம் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினேன்” என அந்த சம்பவத்தை அவரே விவரிக்க தொடங்கினார்.
என்னுடைய நீளமான தலை ஆட்டோ ஓட்டுனருக்கு வித்தியாசமாக தெரிந்து இருககிறது .என்னையே வைத்த கண் வாங்காமல் நன்றாக பார்த்தார். பின்னர் நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை ஆங்கிலத்திலேயே கேட்டார். அவரிடம் ” நான் அஸ்ஸாமில் இந்த இடத்தில் இருந்து வருகிறேன்” என்று சொன்னேன்,
உடனே அந்த ஆட்டோ ஓட்டுனர் “அஸ்ஸாமா!! அது வங்கதேசம் பக்கத்தில் உள்ள மாநிலம் தானே” என கேட்டு விட்டு என்னுடைய கையில் இருந்த தோல் பையை பார்த்து “இது பசுத்தோலில் செய்ததா???” என்று கேட்டார். நான்  இல்லை என்று மறுத்து, “இது ஒட்டக தோல் ராஜஸ்தானில் வாங்கியது “என்றேன் .
ஆனால் , என்னுடைய பதிலை ஏற்காமால் “உங்களை போன்ற ஆட்கள் கொடுக்குக் ஊக்கத்தினால் தான் பசுக்கள் கொல்லப்படுகின்றன” என்றார். நான் ” உன்னுடைய வேலையை பார்த்து ஆட்டோவை ஓட்டு நான் போகும் இடம் கொண்டு போய் சேர்” என்றேன்.
barun
‘           ஆட்டோ ஒரு சிக்கனலில் நின்றது , ஆட்டோ ஓட்டுனர் பின் பக்கம் திரும்பி ,குனிந்து என்னுடைய பையை எடுத்து முகர்ந்து பார்த்தார். திரும்ப சிக்னலில் பச்சை விளக்கு வந்ததும் ஆட்டோ கிளம்பி சென்று ஒரு சிறிய கோவிலின் முன நின்றது , அங்கே மூவர் நின்று இருந்தனர் அதில் ஒருவர் நெற்றியில் சிவப்பு திலக மிட்டிருந்தார். அவர்கள் அனைவரும் மராத்தியில் பேசிக்கொணடனர். பின்பு என்னுடைய பெயரை கேட்டார்கள். நான் என்னுடைய பெயர் “பருன்” என்றேன் ,
அவர்கள் “முழுப்பெயரை சொல்” என்றார்கள். நான் “பருன் காஷ்யப் புயன்” என்று முழுப்பெயரையும் சொன்னதும் , அவர்கள் திரும்பவும் மராத்தியில் பேசினார்கள். அவர்கள் பேசியதில் இருந்து பிராமின் என்ற வார்த்தை மட்டும் எனக்கு புரிந்தது.
நான் பிராமின் என புரிந்து கொண்டு ஆட்டோ வை அங்கிருந்து போக அனுமதித்தார்கள். ஆட்டோ நான் போகும் இடம் வந்ததும் , ஆட்டோவில் இருந்து இறங்கி ஆட்டோ நம்பரை எழுதிக்கொண்டேன் , ஆட்டோ ஓட்டுனரின் போன் நம்பரை கேட்டேன் . ஆட்டோ ஓட்டுனர் பெருமிதத்துடன் நம்பர் தந்தது மட்டும் அல்லாது , “இன்று உன்னுடைய நாள் நல்ல நாள் தப்பித்துக்கொண்டாய்” எனக்கூறினார், நானும் “இதை இப்படியே விடப்போவது இல்லை நான் புகார் செய்வேன்” என கூறிவிட்டேன்.
இவ்வாறு தனது முக நூலில் கூறியுள்ளார் பரூன்.
தற்பொழுது பசு நேசம் பரிணாம வளர்ச்சி பெற்று தோல் பொருள்கள் வரை வளர்ந்துள்ளது. பிரதமரின் பேச்சும் எச்சரிக்கையும் இவர்களை தடுக்காது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது