🌏ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டு என மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகா காந்தி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: ஜல்லிக்கட்டு ஒரு பயங்கரமான, ஆபத்தான விளையாட்டாகும். தமிழக மக்கள் அறிவுபூர்வமானவர்கள். எனவே, ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஜல்லிகட்டுக்கான தடையை நீக்குவதை விட பாஜக அரசுக்கு வேறு முக்கியப் பணிகள் நிறைய உள்ளன.
🌏 யாதவ மகா சபை சார்பில் வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட முதல் மாவீரன் வீரன் அழகு முத்துக்கோனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. முன்னதாக, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து ஊர்வலமாக யாதவ மகா சபையினர் வந்தனர். இந்த ஊர்வலம் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் முடிவடைந்தது. பின்னர், அங்குள்ள வீரன் அழகு முத்துகோன் சிலைக்கு எம்.கோபாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
🌏விசாரணைக் கைதி திடீர் சாவு: காவல் துறை மீது உறவினர்கள் புகார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் திங்கள்கிழமை உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் குப்புசாமி (45). இவர் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பதாக சாணார்பட்டி போலீஸார் கடந்த வியாழக்கிழமை அவரை கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர், மதுரை சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டுள்ளார். விசாரணைக் கைதிகள் பிரிவில் இருந்த குப்புசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் தலை வலிப்பதாகக் கூறிய குப்புசாமி திடீரென மயங்கியுள்ளார். அவரை சிறை அதிகாரிகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குப்புசாமியை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்திருப்பதாகக் கூறினர்.
காவல்துறை மீது புகார்: விசாரணைக் கைதி குப்புசாமி இறந்ததை அறிந்ததும், அவரது மனைவி ஈஸ்வரி, மகன், 2 மகள்கள் ஆகியோர் உறவினர்களுடன் மதுரை வந்தனர். மதுரை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்ட குப்புசாமி சடலத்தைப் பார்த்த பின்னர் அவரது உறவினர் செந்தில்ராஜூ கூறியதாவது: குப்புசாமி சடலத்தில் ரத்தக் காயங்கள் உள்ளன. ஆகவே முறையான விசாரணை நடத்த வேண்டும். குப்புசாமி குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
🌏விழுப்புரம் – திண்டுக்கல் இடையே இரு வழிப்பாதை பணி விரைவில் நிறைவு: ரயில்வே அதிகாரி தகவல் விழுப்புரம் – திண்டுக்கல் இடையிலான 113 கி.மீ. தூரத்துக்கான இருவழிப்பாதை பணி இந்தாண்டு இறுதியில் நிறைவடையும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.
🌏தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்வு; ஏழைகளுக்கு புதிய மருத்துவச் சலுகைகள்
🌏திருச்சி விமான நிலையத்தில் மிகப் பெரிய தேசியக் கொடி ஏற்றம் திருச்சி விமான நிலைய வளாகத்தில் 100 அடி உயரத்தில் மிகப் பெரிய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.நாடு முழுவதும் 19 விமான நிலையங்கள் உள்ளிட்ட 90 முக்கிய இடங்களில் மிக உயரமான இரும்பாலான கொடிக் கம்பத்தில் மிகப் பெரிய தேசியக் கொடியை ஏற்ற மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், திருச்சி விமான நிலையத்தில் 106 அடி உயரத்தில் (ஹைமாஸ்) கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
திங்கள்கிழமை காலை இந்தியாவின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி, இந்தக் கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் ஆணையர் மஞ்சுநாதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
🌏நீதித் துறை பிரச்னைகளை பிரதமர் பேசாதது வருத்தமளிக்கிறதுபிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதித் துறை தொடர்பான பிரச்னைகள் குறித்துப் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தெரிவித்துள்ளார்.
🌏ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா சூளுரை. உழைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்து அதனால் ஏழைகள் எவரும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க சூளுரைக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
🌏10 கோடி பெண் தொழிலாளர்களுக்கு பேறு காலத்தில் உதவும் புதிய திட்டம், நாடு முழுவதும், அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும், 10 கோடி பெண்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.அனைத்து நிறுவனங்களிலும், பெண்களுக்கு மகப்பேறு விடுமுறைக்காலத்தை, 26 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதா, ராஜ்யசபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும், 10 கோடி பெண்கள், பேறுகாலத்தில் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்த, மத்திய தொழிலாளர் துறை திட்டமிட்டுள்ளது.
🌏சிலிண்டரை தூக்கிச் சென்ற இன்ஸ்பெக்டர் மாற்றம் காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு கடைவீதியில் ஓட்டல் நடத்தி வரும் கருணாநிதியிடம் மாமூல் தரவேண்டும் என திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் ஆடலரசன் கடந்த 5ம் தேதி மிரட்டி உள்ளார். இதையடுத்து ஓட்டலில் சிசி கேமரா பொருத்தப்பட்டது. மறுநாள் வந்த இன்ஸ்பெக்டர், ‘எஸ்பியிடம் புகார் கூறுகிறாயா’ என கூறியபடி, அங்கிருந்த சிலிண்டரை பறித்துச் சென்றார்.
இதுபற்றி சிசி கேமரா பதிவுடன் எஸ்பியிடம் திருநள்ளாறு வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்ரீதர் மற்றும் கருணாநிதி புகார் பதிவு செய்தனர். எஸ்பி எடுத்த அதிரடி நடவடிக்கையின்படி, புதுச்சேரி ஆயுதப்படைக்கு இன்ஸ்பெக்டர் ஆடலரசன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
🌏நீதியரசர்களும், வழக்குரைஞர்களும் நல்ல தீர்வினை எட்டிட வேண்டும் என காந்திய மக்கள் இயக்க செய்தித் தொடர்பாளர் பா குமரய்யா கூறியுள்ளார்.
🌏ராஜபக்சேவின் மகன் இரண்டாவது முறையாக கைது, இலங்கை அதிபராக 10 ஆண்டு காலம் பதவி வகித்தவர் ராஜபக்சே. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இவர் தோல்வி அடைந்தார். சிறிசேனா அதிபர் ஆனார். ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பத்தினர் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்தது. ராஜபக்சேயின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே இரண்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததில் நடந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை பற்றி நிதி குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நாமல் ராஜபக்சேயை நிதி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
🌏மேகதாதுவில் அணை கட்ட ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.6000 கோடி மதிப்பில் அணைகட்ட போவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா அறிவித்திருப்பதற்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் உரையாற்றிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.5,912 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார்
🌏இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் வாகா: இந்தியா-பாகிஸ்தான் எல்லயைான வாகாவில் சுதந்திர தின விழா நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. வாகாவில் நடைபெறும் சுதந்திர தினவிழாலை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இந்திய ராணுவ அதிகாரிகளும் குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றுள்ளனர்.
🌏பெட்ரோல், டீசல் விலை குறைப்பு. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிர்ணய அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அறிவிக்கின்றன. இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🌏ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் இந்திய வீரர் விகாஷ் கிருஷ்ணன் தோல்வியடைந்தார். ரியோ ஒலிம்பிக் ஆண்கள் குத்துச்சண்டை போட்டியில் 75 கி.கி., ‛மிடில் வெயிட்’ பிரிவில் இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன், உஸ்பெகிஸ்தானின் பெட்டெமிரை சந்தித்தார். இதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினால், குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்யலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் எதிராளியின் சராமரி குத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 0-3(27-30, 26-30, 26-30) என்ற புள்ளி கணக்கில் விகாஷ் தோல்வியை தழுவினார். இதனையடுத்து குத்துச் சண்டையில் இந்தியாவின் பதக்கக் கனவு முடிவுக்கு வந்தது.
🌏வெறும் சுதந்திரம் மட்டும் போதாது எனவும், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.
இதுகுறித்து டில்லியில் தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றி வைத்து அத்வானி பேசியதாவது: சுதந்திர இந்தியாவில், செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. உலகஅளவில் இந்தியாவின் பெருமை உயர்த்தப்பட வேண்டும். நாட்டுப் பற்றாளர்களுக்கு, வெறும் சுதந்திரம் மட்டும் போதாது; சுதந்திரம், சுயாட்சியாக உருப்பெற வேண்டும். ஒட்டு மொத்த நாடும், இப்பணிக்காக, தன்னை அர்ப்பணிக்க வேண்டும்
தற்போது பல நாடுகளிலும் பயங்கரவாதம் முக்கியப் பிரச்னையாகத் திகழ்கிறது. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக நாம் சண்டையிட்டு வருகிறோம்; இதில் நமக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
🌏அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு! வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரையில், சின்னக்கல்லாறு, நடுவட்டம், அவிநாசி பகுதிகளில் 2 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
🌏பச்சிளம் குழந்தை கடத்திய பெண் கைது: 10 ஆண்டு சிறை மருத்துவமனையில் தூங்கிக்கொண்டிருந்த தாயின் அருகில் இருந்த பச்சிளம் குழந்தை கடத்திய பெண் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 57 வயதுடைய பெண்ணிற்கு 10 வருடம் சிறை தண்டனையை பிறப்பித்து தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌏…. பணியிடைநீக்கம்…… திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுரைக்காபேட்டையில் குடிநீரில் கழிவு நீர் கலந்து சம்பவத்தால் கிராமமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவின்பேரில் ஊராட்சி செயலாளர் சந்துரு குடிநீர் சப்ளை செய்யும் பம்ப் ஆப்ரேட்டர் செல்வம் இருவரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவு… கழிவு நீர் கலந்த நீரை பருகி 50 பேர் பாதித்ததின் காரணம் குறித்து விளக்கம் அளிக்க ஆட்சியர் சுந்தரவல்லி தகவல்..
🌏திருத்தணி அடுத்த சொரக்காபேட்டையில் கழிவ நீர் கலந்த குடிநீரை பருகியதில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு..சாவித்திரி என்ற மூதாட்டி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தார் என உறவினர்கள் புகார். உண்ணாமலை கண்ணப்பன் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இறந்தநிலையில் இன்று பலி எண்ணிக்கை மூன்றானது
🌏காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி விட்டது என்று சுதந்திர தின விழா உரையின் போது கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
🌏விழுப்புரம்-திண்டுக்கல் இடையேயான 113 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிவடையும். செங்கோட்டை மற்றும் புனலூர் (49 கி.மீ.), காரைக்குடி-பட்டுக்கோட்டை (73 கி.மீ.) பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. பேசின்பிரிட்ஜ் மற்றும் மூர்மார்க்கெட் இடைப்பட்ட பகுதியில் 5, 6-வது வழிப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தாம்பரம் முனையம் அமைக்கும் பணிகளை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.-தென்னக ரயில்வே பொது மேலாளர் வஷிட்டu ஜோரி தகவல்.
🌏சென்னை பெரம்பூர் ICF ரெயில் பெட்டி தொழிற்சாலையில் கடந்த ஆண்டு 2005 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. நடப்பாண்டில் (2016-2017) 2486 பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நடப்பாண்டில் 404 துருப்பிடிக்காத ரெயில் பெட்டியை தயாரிக்க இருக்கிறோம் – தென்னக ரயில்வே பொது மேலாளர் வஷிஷ்ட ஜோரி சுதந்திர தின விழாவில் உரை.
🌏திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ரூ.186 கோடி மதிப்புள்ள தங்கம் மாயமாகி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட விசேஷ தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
🌏போர்ச்சுகல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டா வரும் ஜனவரி மாதம்(2017) இந்தியா வருகை தர உள்ளார். கோவாவும், பெங்களூரும் அவரது பயணத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அவர் கோவாவை பூர்விகமாகக் கொண்டவர்
🌏இஸ்தான்புல் நகரில் உள்ள 3 முக்கிய கோர்ட்டுகளில் துருக்கி போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். 173 அரசு வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்களை கைது செய்வதற்கான வாரண்டுகளுடனும் அவர்கள் சென்றனர். தீவிர விசாரணைக்கு பின்னர், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி பலரை கைதும் செய்தனர். எனினும் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை
🌏பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 17 ந்தேதி ஒரு நாள் நிறுத்தம் கோவில் நிர்வாகம் அறிவிப்பு
🌏நெல்லை ஆயுதபடையில் காவலராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன் இவருக்கு நாகர்கோவிலில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேண்ட் வாசிக்கும் பணி ஒதுக்கபட்டது.இந்நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள சொந்த ஊருக்கு போய்விட்டு திரும்பும் போது இருசக்கரவாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்து.இதில் சம்பவ இடத்திலேயே காவலர் பலி.