டோக்கியோ:
ப்பானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியா உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தது. இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓடினர்.
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டு நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.6 ஆகப் பதிவானது.
நிலநடுக்கத்தால்  தலைநகர் டோக்கியோ உட்பட பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் லேசாக குலுங்கின.  இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறினர்.

நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என்று அந்த நாட்டு புவியியல் மையம் அறிவித்தது. எனினும் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் அடுத்தடுத்து லேசான நிலஅதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011 மார்ச் 11-ம் தேதி இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். சுனாமி தாக்குதலால் புகிஷிமா அணு மின் நிலையத்தில் அணுக் கசிவு ஏற்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.