கோவை:
மிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற்றது.

டாக்டர் சிவசாமி
டாக்டர் சிவசாமி

கோவை காரமடை  அடுத்த மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி. வயது 83. டாக்டரான இவர் தமிழக விவசாயிகள் சங்க தலைவராக இருந்தார். கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம்  பாதிக்கப்பட்டிருந்த, சிவசாமி நேற்று மாலை காலமானார்.
காலமான சிவசாமி சென்னை  ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தார். பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை போன்ற கிராமப்பகுதிகளில் மருத்துவ சேவை செய்து  வந்தார். தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் நாராயணசாமி நாயுடுவுடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக விவசாயிகளின் இன்னல்களை கண்டு, அவர்களுக்காக களமிறங்கினார்.  நாராயணசாமி நாயுடு மரணத்தை அடுத்து தமிழக  விவசாயிகள் சங்கத்தின் தலைவரானார்.
விவசாயிகள் போராட்டத்தில் டாக்டர் சிவசாமி
விவசாயிகள்  சங்க கூட்டத்தில் டாக்டர்  சிவசாமி (பழைய படம்)

விவசாயிகளுக்காக பலவிதமான போராட்டங்கள் நடத்தி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்தவர். மின்சார கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் மாட்டு வண்டி போராட்டம் நடத்தினார்.  பலமுறை சிறை சென்றுள்ளார். டாக்டர் சிவசாமி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று  மாலை 4 மணிக்கு பிரிக்கால் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்காக மருத்துவத்துறையை விட்டு களம் புகுந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.