(நேற்று முன்தினம் வெளியான பேட்டியின் தொடர்ச்சி)

nagma_2593628f

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பல கட்சிகளும் கூட்டணிக்கு தயாராகின்றன. காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும்.. அல்லது எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தி.மு.கவுடன் கூட்டணி ஏற்படலாம். அல்லது காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையலாம். அப்படி அமையும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் கட்சி என்பதைவிட தலைமை பிம்பம் என்பதுதான் அதிகமாக போகஸ் ஆகும். மக்களிடம் எடுபடும்.

அப்படி என்றால் யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

யார் என்பதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எப்படிப்பட்டவர் என்பதை சொல்கிறேன். மக்கள் செல்வாக்கு உள்ளவர், மக்களை நேரடியாக சந்திப்பவரை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக, தமிழ், தமிழக உரிமைகளுக்காக குரல்கொடுப்பவரை அறிவிக்க வேண்டும். ஏனென்றால், தமிழகத்தில் இப்போது தமிழ்தேசிய உணர்வு பெருகியிருக்கிறது. எதிலும், தமிழ், தமிழர் என்று சிந்திக்கும் மனோபாவம் அதிகரித்திருக்கிறது. ஆகவே அதுபோன்ற நபரை தேர்ந்தெடுத்து முதல்வர் வேட்பாளராக அறிவித்தால், தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் பழைய செல்வாக்கை பெறும்.
ஈழவிவகாரத்தில் காங்கிரஸ் மீதுதான் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் தமிழ், தமிழர் என்று காங்கிரஸ் பேசினால் எடுபடுமா?

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு காங்கிரஸ் அரசாங்கம் உதவியதாக சொல்வது தவறு. அதை எதிரத்து, ஈழத்தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த உதவிகளை பெரிய அளவில் நாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை. ஆகவே அப்படி ஒரு பெயர் இருக்கிறது. ஆனால் உண்மமையில் ஈழத்தமிழர்க்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறது காங்கிரஸ். ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் சிறப்பானது. அதை இன்னும் மேம்படுத்தி கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் செயற்படுத்த வேண்டும்.
17-1429244106-vijayadharani-kushboo3-600

 

இந்த அளவுக்கு பேசுகிறீர்கள். தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று இங்கே பலரும் சொல்கிறார்களே..  உங்கள் கருத்து என்ன?

தனி தமிழ் ஈழம்தான் சரி என்று நான் ஆரம்பகாலத்தில் எவ்வளவோ முறை பேசியிருக்கிறேன். அப்போது நான் இந்த அளவுக்கு பிரபலம் இல்லை என்பதால் மீடியாவில் நான் பேசியது பெரிய அளவில் வரவில்லை இப்போதுகூட தனி தமிழ் ஈழம் கிடைத்தால் மிகவும் மகிழ்வேன். அதே நேரம் அது சாத்தியமா என்பதையும் ஆராய வேண்டும். இன்றைய சூழ்நிலையில், நம் மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளோடு இலங்கையில் தமிழர்க்கு மாகாணம் அமைய வேண்டும். சிங்களர்களோடு சரி சமமாக வாழ அதுவே வழி.

குஷ்பு, நக்மா ஆகியோருடன் உங்களுக்கு என்ன பிரச்சினை?

 ஒரு பிரச்சினையும் இல்லை. அவர்களைப்போல பலருக்கும் அறிமுகமான நடிகர்கள் காங்கிரஸுக்கு பலம்தான். காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் அவர்களை மக்களிடத்தில் இன்னும் பரவலாக கொண்டு செல்ல இவர்கள் உதவுவார்கள்.

சரி காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் என்றால் மூத்த தலைவர், மத்திய அமைச்சராக இருந்தவர் என்கிற முறையில் ப.சிதம்பரம் அறிவிக்கப்படுவாரா.. சமீபத்தில் ஒரு வாரமிருமுறை இதழுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர்கூட தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

அதான்  ஏற்கெனவே சொன்னேனே… அதை கட்சியின் அகில இந்திய தலைமைதான் தீர்மானிக்க வேண்டும்.    🙂