karunas

ருணாஸின் காமெடி படங்களில் சிரிக்க வைக்கிறதோ இல்லையோ… நிஜத்தில் ரொம்பவே ரசிக்கவைக்கிறார் மனிதர்.

திடீரென, சாதி அரசியலில் புகுந்து, அமைப்பை ஏற்படுத்தினார். ஊருக்கு இரண்டு பேர்கூட சேராத அந்த அமைப்புக்கு தமிழகம் முழுதும் முப்பது லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக அதிரடியாக பேசினார்.

5

அடுத்த காமெடியாக, “நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்காத அஜீத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். நடிகர் சங்கம் சார்பாக கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைக்கக்கூடாது.  எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது” என்றெல்லாம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.   அதோடு, “உலக நாயகனை அவதூறாக பேசிய சரத், (ராதா)ரவி,  டி.ஆர்., சிம்பு ஆகியோர் மன்னிப்பு கேட்காட்டி, சங்கத்தில் இருந்து நீக்கணும்” என்றும் ஒரு பதிவும் கருணாஸின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது.

இப்போதோ, “அய்யோ.. நான் அப்படி எழுதலே.. யாரோ என் ட்விட்டர் அக்கவுண்ட்ல புகுந்து அப்படி எழுதிட்டாங்க…” என்று புலம்பியபடியே, சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்  கொடுத்திருக்கிறார்.

“சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இப்படி அடிக்கடி நடக்கிறதே” என்று காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

“சில பிரபலங்களின் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது உண்மைதான். அதே நேரம் பலர், “தன்னை மறந்த நிலையில்”  ட்விட்டர், பேஸ்புக்கில் எதையாவது எழுதிவிடுகிறார்கள். பிரச்சினை ஆகிவிட்டால், அது நான்  அவன் இல்லை என்று  எங்களிடம் புகார் கொடுத்து எங்களை டார்ச்சர் செய்கிறார்கள்” என்று வருத்தமான பதில் வந்தது.

“ஹூம்.. முப்பது லட்சம் சாதித் தொண்டர்களின் தலைவராண கருணாஸ் அவர்களே… இதானா  சார் உங்க டக்கு!”  என்று இப்போது கிண்டலடிக்கிறார்கள் பலர்.