ஆர்.கே.நகரில் ஆக்கிரமிப்பு: முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் தனியாருக்கு சொந்தமனதாக கருதப்படும் நான்கு ஏக்கர் பரப்பளவு 20-அடி ஆழம் கொண்ட குளமாக (இளையமுதலி தெரு) உள்ள இந்த இடத்தை சென்னை மாநகராட்சி வாகனங்கள் மூலமாக ரப்பீஸ்கள் மற்றும் குப்பைகளை கொட்டி குளத்தை தூர்ப்பதின் மர்மம் என்ன….?
பெரும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் வடிகாலாக இருந்த அந்த இடத்தை சமன்படுத்துவதால் திருவள்ளுவர் நகர், வ.உ.சி நகர், மாதா கோவில், இளையமுதலி தெரு, உள்ளிட்ட பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது….
இது ஆளுங்கட்சிகாரர்களின் திட்டமிட்ட சதி செயல் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்…
38-வது வட்டத்துக்குள் அடங்கிய இந்த இடம் தற்போது தனியார் லாரிகளை நிறுத்தி வாடகை வசூல் செய்யும் கவுன்சிலர் யார்… உண்மையில் இந்த இடம் யாருக்கு சொந்தம் 40_ஆண்டுகள் காலியாக இருந்த இடத்தின் மர்மம் தான் என்ன…வைதியநாதன் மேம்பால ஏற்றத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து மாடி வீடு கட்டியுள்ளதாகவும் தகவல் ……தமிழக முதல்வர் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையீட்டு உண்மையை கண்டறிந்து குளம் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை….கே.ஆர்.கணேஷ்……………தமிழக மக்கள் இயக்கம்…
நயன்தாராவின் பாலியல் அத்துமீறல் –வன்மையாக கண்டிக்கிறது தமிழக மக்கள் இயக்கம்👇
ரூ:399க்கு விமான டிக்கெட்: சுதந்திர தினம் ஸ்பெஷல்-சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல தனியார் விமான நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்தில் சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்தில், சில குறிப்பிட்ட பாதைகளில் சிறப்பு கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிப்பட்டுள்ளதாவது:- ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கட்டனச் சலுகையில் புக்கிங் செய்துக்கொண்டு, ஆகஸ்டு 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த சலுகை மூலம் பயணம் செய்யலாம். உள்நாட்டு போக்குவரத்து கட்டணச் சலுகையாக ரூ:399க்கு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. அகமதாபாத்-மும்பை, அமிர்தசரஸ்-ஸ்ரீநகர், மும்பை-ஐதராபாத், மும்பை-கோவா, கோவை-ஐதராபாத், பெங்களூரு-கொச்சி, பெங்களூரு-சென்னை ஆகிய வழிதடங்களில் மட்டும் கட்டணச் சலுகையில் பயணிக்கலாம்.சர்வதேச போக்குவரத்து கட்டணச் சலுகையாக ரூ:2,999க்கு விமான டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் கீழ் துபாய்-டெல்லி மற்றும் துபாய்-மும்பை ஆகிய பாதகைகளில் மட்டுமே பயணம் செய்யலாம்.
அக்னி நட்சத்திரம் இந்தி ரீமேக்… கார்த்திக் வேடத்தில் சித்தார்த்? அக்னி நட்சத்திரம் படத்தை பிஜோய் நம்பியார் இந்தியில் ரீமேக் செய்கிறார். தமிழில் கார்த்திக் நடித்த வேடத்தில் தனுஷை நடிக்க வைப்பதே அவரது விருப்பமாக இருந்தது தனுஷ், வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருப்பதால் அக்னி நட்சத்திரம் இந்தி வாய்ப்பை ஏற்க முடியாத நிலை. அதனால் அவருக்குப் பதில் கார்த்திக் வேடத்தில் நடிக்க, தமிழ், இந்தி இரு ரசிகர்களுக்கும் பரிட்சயமான நடிகராக பிஜோய் நம்பியார் தேடி வந்தார். கடைசியாக கிடைத்த தகவலின்படி அவர், நடிகர் சித்தார்த்தை தேர்வு செய்திருப்பதாக கேள்வி. தமிழ், இந்தி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் சித்தார்த் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கபாலி நஷ்டம் – ஆந்திராவிலிருந்து வரும் அவலக்குரல்கள்-கபாலி படம் வசூல் சாதனை செய்ததாக ஒருபுறம் கூறப்படும் நிலையில், அதிக தொகை கொடுத்து கபாலியின் தெலுங்கு திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியவர்கள் நஷ்டம் என்று புலம்புவதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கபாலியின் தெலுங்குப் பதிப்பு ஆந்திராவில் முப்பது கோடிகளுக்கு விலைபோனதாக கூறப்படுகிறது. படத்தின் ஓபனிங் மிக நன்றாக இருந்ததாகவும் வார நாள்களில் படத்தின் வசூல் கணிசமாக குறைந்ததால் போட்ட முதலயே எடுக்க முடியாமல் விநியோகஸ்தர்கள் திணறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் நிஜாம் பகுதி விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அவர்கள் போட்ட பணத்தை படம் எடுத்திருக்கிறது.நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர்.
மர்ம உறுப்பை அறுத்த காதலன்: திருமணத்துக்கு மறுத்ததால் விபரீதம்! பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர், அவரது காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் தென்னரசுக்கு ஆலோசனை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா! தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுக்கு அமைச்சர்கள் குறுக்கீடு இல்லாமல் எப்படி பேச வேண்டும் என ஆலோசனை வழங்கினார். தமிழக சட்டசபையில் நேற்று பள்ளிக் கல்வி, உயர் கல்வி, விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மர்றும் இளைஞர் நலன் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுவின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது குறுக்கிட்டு பதிலளித்தனர்.இதனையடுத்து அமைச்சர்கள் பதிலளிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக கூறி திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுவுக்கு ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன். ஒரு விஷயத்தை கூறும் பொழுது, அதை சொல்லிவிட்டு, இதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பாரா? இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வியுடன் முடிக்கிறீர்கள்.
இதனால் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர்கள் எழுந்து நின்று பதில் சொல்கின்றனர்.
தங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. எனவே வினாவோடு முடிக்காமல் வேறு விதமாக பேச்சை முடித்தால் அமைச்சர்களின் குறுக்கீடுகளை ஓரளவு தவிர்க்கலாம் என்றார். இதற்கு தங்கம் தென்னரசும் நல்ல யோசனை என்றார்.
ரஷியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளும் சிரியாவில் உள்ள நெருக்கடியை சரி செய்வது குறித்து பொதுவான இலக்குகளை வைத்திருப்பதாகவும் மேலும் இரு நாடுகளின் கருத்துகள் ஒத்துப்போகாத பட்சத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் எனவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார்.49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும்.சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்
மக்களால் வெறுக்கப்பட்ட அதிபர் என்று கருதப்படும் பெர்டினான்ட் மார்க்கோஸின் உடலை மணிலாவிலுள்ள கதாநாயகர்களின் கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதித்துள்ள தீர்மானத்திற்கு எதிராக பிலிப்பைன்ஸில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.தன்னுடைய ஆட்சிக்கு எதிராக கேள்வி கேட்க துணிந்தவரை சித்ரவதைக்கு, சிறைத் தண்டனைக்கு, கொல்லுவதற்கு ஆணையிட்ட ஒரு சர்வாதிகாரி மற்றும் கொள்ளைக்காரர் என்று இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பல குழுக்களின் கூட்டணியானது மார்கோஸை விமர்சித்திருக்கிறது.
அதிகப்படியான வரவு செலவு திட்ட பற்றாக்குறைகள் தொடர்பாக ஸ்பெயினுக்கும், போர்ச்சுகல்லுக்கும் அபராதங்களை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேலாக வரவு செலவு திட்டப் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றிய விதிமுறையை இந்த இரு நாடுகளும் மீறி இருக்கின்றன.
இலங்கை: மிக் விமானங்கள் கொள்வனவு ஆவணங்கள் மாயம்-கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்தது தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் அறிவித்தனர்.
இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைய வேண்டும் என்ற அரசினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முன்னாள் போராளிகள் மர்மச் சாவு! சர்வதேச விசாரணை தேவை! வேல்முருகன் வலியுறுத்தல்
விஜயகாந்துக்கு பிடிவாரண்ட்: பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு
கேரளாவுக்கு கடத்த முயன்ற 59 மாடுகள் மீட்பு- திருவள்ளுர் அருகே இறைச்சிக்காக லாரியில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 59 மாடுகள் மற்றும் கன்றுக்குடிகளை கோராஷ்டீரிய அமைப்பினர் பிடித்து மப்பேடு காவல்நிலையத்தில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சட்டசபை நிகழ்வுகளை காண நியூ காலேஜ் மாணவர்கள் வந்தனர்
எஸ்.ஐ. மனைவியிடம் செயின் பறிப்பு திருவள்ளுர் மாவட்டம், புழல் அடுத்த கதிர்வேடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சென்னை அசோக்நகர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்தியா, மகனை பள்ளி முடிந்து வீட்டுக்கு அழைத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த இரண்டு வாலிபர்கள் சந்தியாவின் கழுத்தில் இருந்த 11 சவரன் தாலி செயினை அறுத்துக்கொண்டு தப்பினர். இதில் காயமடைந்த சந்தியா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புழல் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜயவாடா,, இறந்த பசுவின் தோலை அகற்றியதற்காக இரண்டு தலித் சகோதரர்களை தென்னை மரத்தில் கட்டிவைத்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. குஜரத்தில் இதே போன்ற சம்பவம் நடைபெற்று மிகப்பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி ஒரு சில வாரங்களே ஆகியிருந்த நிலையில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தோழியை காபியில் விஷம் கலந்து கொலை செய்த இளம்பெண்-வழக்கில் பின்னடைவு. இந்தோனேசியா ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின் மற்றும் ஜெசிகா வாங்சோ இருவரும் தோழிகள். 7 ஆண்டுகளாக நட்புடன் பழகி வந்து உள்ளனர். இருவரும் சிட்னியில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றுள்ளனர். மட்டுமின்றி ஒன்றாகவே தங்கியுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மிர்னா தமது தோழியின் நலன் கருதி, அப்போது அவர் காதலித்து வந்த நபர் போதை மருந்துக்கு அடிமையானவர் என கூறி உள்ளார். மேலும் தங்களுக்குள் இருக்கும் உறவை கைவிட கோரியதாகவும், மிர்னா கூறி உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த வாங்கோ மிர்னாவிடம் சண்டையிட்டுள்ளார்.இதனையடுத்து மிர்னா தமது தோழியிடம் இருந்து விலகியே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர்பேதும் இல்லாத மிர்னாவிடம் மீண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட வோங்சோ, மிர்னாவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.
இதை தொடர்ந்து இந்தோனேசியாவில் உள்ள தமது தோழி பூன் ஜுவிடா என்பவருடன் இணைந்து வாங்சோ மிர்னாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
ஒரு ஓட்டலில் இருவரும் சந்திக்க வாங்சோ மிர்னாவை அழைத்து உள்ளார். மிர்னா வருவதற்கு முன்னதாகவே அவருக்கு மிகவும் பிடித்தமான காபி ஒன்றை ஆர்டர் செய்து வரவழைத்து அதில் விஷம் கலந்து வைத்திருந்துள்ளார் வோங்சோ. மிர்னா வந்து சேர்ந்ததும் எவருக்கும் சந்தேகம் வராத வகையில் குறிப்பிட்ட கோப்பையை மிர்னாவிடம் நீட்டி குடிக்க வைத்துள்ளார்.
ஆனால் ஒரு வாய் மட்டுமே அந்த காபியை அருந்திய மிர்னா, அதில் வேறுபட்ட சுவை கலந்திருப்பதை உணர்ந்து மேலும் அருந்த மறுத்துள்ளார். ஆனால் அருந்திய அந்த ஒரு வாய் காபியே அவரது உயிரை பறிக்க போதுமானதாக இருந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய இளம்பெண், ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்ற ஜெசிகோ வாங்சோ தற்போது விசாரணையை சந்தித்து வருகிறார்.இச்சம்பவத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே வாங்சோ தனது காதல் முறிவாலும், தோழியின் பிரிவாலும் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தனது முன்னாள் காதலின் வாகனத்தை சூறையாடியுள்ளார், மது போதையில் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆஸ்திரேலிய போலீசார் ஜகார்த்தா விசாரணை அதிகாரிகளுக்கு அளித்துள்ள ஆவணங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மனமுடைந்து காணப்பட்ட வாங்சோ தற்போது மன நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கில் அவரை மேற்கொண்டு குற்றவாளியாக்கி தண்டிக்க முடியாது எனவும் ஆஸ்திரேலியா அதிகாரிகள் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
உலகின் மிக குள்ள ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு-பிரேசில் நாட்டில் குடியிருந்து வரும் உலகின் குள்ள ஜோடி தங்களின் நீண்ட 8 வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.கட்யுசியாஹோசினோ மற்றும் பவ்லோ கேபிரியல் ட சில்வா இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள்.குள்ளமானவர்கள் சமூகவலைதளம் ஒன்றின் மூலம் சந்தித்துக்கொண்ட இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரிக்கை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர். புதிய கல்விக் கொள்கை வரைவை மாநில மொழிகளில் மொழிபெயர்த்து மக்கள் கருத்தை கேட்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் சமூக ஆர்வர்களிடமும் கருத்து கேட்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்லும் முதல் குழு யாத்ரீகர்கள் செல்லும் விமானத்தை முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை: அக்டோபரில் நடக் உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 12 மேயர் பதவிகளில் 7 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பேரவையில் அமைச்சர் வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார்.
ஆரணி: அதிமுக மாவட்ட மகளிரணி செயலாளர் குமுதவள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. குமுதவள்ளி மீது நடவடிக்கை கோரி ஆரணியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார்.
உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. உள்ளாட்சி பதவிகளில் முதலில் 33% இடஒதுக்கீடு அளித்தது திமுக ஆட்சியில்தான் என்று கீதா ஜீவன் கூறியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு கீதா ஜீவன் மறுப்பு தெரிவித்தார்.
ஈஷா யோகா மையத்தில் உள்ள மகள்களை பார்க்க தந்தையை அனுமதிக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஈஷா மையத்தில் 2 மகள்களையும் மூளைச்சலவை செய்து வைத்துள்ளதாக சத்யஜோதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். மகள்களை ஆஜர்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் சத்யஜோதி ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 மகள்களை பார்க்க அனுமதிக்க ஈஷா மையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில் கோயிலில் தண்ணீர் குடிக்க தலித் பெண்ணிற்கு அனுமதி மறுப்பு குன்னனூர்: உத்திர பிரதேசத்தில் சாம்பால் என்ற இடத்தில் கோயிலில் தண்ணீர் குடிக்க 13 வயது தலித் பெண்ணுக்கு பூசாரி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து கேட்ட அந்த பெண்ணின் தந்தையை பூசாரி தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
ராமேஸ்வரம்: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் மாயமானார்கள். கடந்த 7ம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வங்கிப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்: ஈரோடு ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் கிரானைட் அதிபர் பன்னீர்செல்வம் மதுரை மேலூர் நீதிமன்றத்தி்ல் ஆஜராகினர். அரசின் பட்டா நிலங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைத்து அரசுக்கு இப்பீடு ஏற்படுத்தியது உட்பட 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியளித்தனர்.
பா.ஜ., எம்.பி.,க்கள் தங்களின் தொகுதியில் இதுவரை மேற்கொண்ட பணிகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டிருந்தார். ஆனால் பலர் இதுவரை தங்களின் பணிகள் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.