ரியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முன்னணி டென்னிஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது
ரியோ ஒலிம்பிக் தனிநபர் துடுப்பு படகு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் வில்வித்தை வீரர் அத்து தாஸ் மற்றும் குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் ஆகியோர் காலிறுத்திக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்
பெண்கள் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் சானியா மிர்சா – சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பிரிய முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை உறுதி செய்துள்ள சானியா, கடந்த 5 மாதங்களில் நினைத்த அளவுக்கு வெற்றிகளை ஈட்ட முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், டென்னிஸ் உலகில் இது சாதாரணமான ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் பதக்க பதக்க பட்டியலில், அமெரிக்கா 9 தங்கம், 8 வெள்ளி மற்றும் 9 வெண்கல ப்தககங்களுடன் மொத்தம் 26 பதக்கம் வென்று முதலிடத்தையும், சீனா 8 தங்கம், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களுடன் மொத்தம் 17 பதக்கம் வென்று 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.