சென்னை:
சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த நடிகர் ஜே. கே. ரித்தீஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 3 கோடி பணத்தை மோசடி செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் ஆதி நாராண சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“நான் வெளிநாடு வாழ் இந்தியர். அமெரிக்க நிறுவனம் ஒன்றில் நான் பணியாற்றியபோது ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு நிறுவனம் தொடங்குவதாக கூறி ஜே.கே.ரித்தீஷ் 3 கோடி ரூபாய் பணம் பெற்றார். . இதனை வங்கி மூலமாக அளித்தேன். ஆனால் குறிப்பிட்டப்படி நிறுவனம் தொடங்காமல் ரித்தீஷ் ஏமாற்றிவிட்டார்.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடமும் கடந்த ஆண்டு புகார் அளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு வேண்டும்” என்று அந்த மனுவில் ஆதி நாராண சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel
