இத்தாலி- மிலன்-பெர்காமோ விமான நிலையம்:
இத்தாலியில் இன்று அதிகாலை , ஒரு சரக்கு விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டி முக்கியமான நெடுஞ்சாலையில் ஓடி விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலையால் விபத்து:
இன்று, வெள்ளிக் கிழமை அதிகாலை மூன்று மணிக்கு ஓரியோ விமான நிலையப்பகுதியில் மோசமான வானிலை நிலவியது. அப்போது பிரான்சின் சார்ல்ஸ் டு கவுலே விமானநிலையத்திலிருந்து பெர்காமோவில் உள்ள “ஓரியோ அல் சேரியோ” விமான நிலையத்திற்கு வந்த டி.எஹ்.எல். 737-400 ரக சரக்கு விமானம் ” தரையிறங்கும்போது ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து முக்கியமான நெடுஞ்சாலையில் ஓடிச் சாலையில் உள்ள வேலிகளில் மோதி விபத்துக்குள்ளானது.
தற்காலிகமாக மூடப்பட்ட விமானநிலையம், மீண்டும் 7 மணிக்குத் திறக்கப்பட்டது.
எனினும், பயணிகள், தங்களின் விமான சேவை வழங்கும் நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு தங்களின் விமானம்குறித்த நேரத்தில் புறப்படுகின்றதா என்பதைத் தெரிந்துகொள்ளுமாறு விமான நிலைய அதிகார்கள் அறிவுறுத்தினர்.
உயிர்ச் சேதமில்லை:
இந்தச் சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவர் காயமின்றி தப்பினார்.
ட்விட்டரில் வெளியான படங்களில் விமானத்தின் முன்பகுதி ஒரு இருவழி நெடுஞ்சாலையில் விமானத்தின் மையப்பகுதி நசுங்கி உள்ளதைக் காண முடிந்தது.