இஸ்லாமாபாத்:
சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
சார்க் நாடுகளின் சார்பாக உள்துறை அமைச்சர்களின் 7வது மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்துகொண்டார்.
சார்க் நாடுகளின் கூட்டமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மாலத்தீவு, நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

சார்க் மாநாட்டில் உள்துறை அமைச்சர்கள்
சார்க் மாநாட்டில் உள்துறை அமைச்சர்கள்

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய  பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப், தீவிரவாதம், ஊழல் மற்றும் குற்றங்களை ஒழிப்பதில் சார்க் நாடுகளுடன் பாகிஸ்தான் இணைந்து செயல்படும். சார்க் நாடுகளில் இயற்கை வளம் மற்றும் மனித வளம் அதிகமாக உள்ளன. எனவே, நமது மக்களின் அமைதிக்கும், வளத்துக்கும் ஏற்ற சூழலை சார்க் நாடுகள் உருவாக்க வேண்டும்’’ என்றார்.
அடுத்து பேசிய ராஜ்நாத்சிங், ‘‘தீவிரவாதிகளில் நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என யாரும் இல்லை. எனவே தீவிரவாதிகளை தியாகிகளாக புகழக் கூடாது. தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது, தனிநபர்கள் மற்றும் தீவிரவாதத்துக்கு ஊக்குவிக்கும் நாடுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை தேவை’’ என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து இந்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் பேசினார். ‘
ஏற்கனவே, காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்கான் வானி கொல்லப்பட்டபோது, அவனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் குறிப்பிட்டார்.  அதற்கு பதிலடி கொடுகத்து ராஜ்நாத் சிங் பேசியது குறிப்பிடத்தக்கது.
மாநாடு முடிந்ததும், மாநாடு நடைபெறும் நாட்டின் பிரதமரை மாநாட்டு பிரதிநிதிகள்  சந்திப்பது வழக்கம். அதன்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து, ராஜ்நாத் சிங் கைகுலுக்கினார்.
நேற்று இரவு சார்க் மாநாட்டை முடித்துக் கொண்டு ராஜ்நாத் சிங் டெல்லி திரும்பினார். இரவு  பிரதமர் மோடியை சந்தித்து மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றி   எடுத்துரைத்தார்.