ஜிஎஸ்டி மசோதா என்றால் என்ன?  இதனால் மக்களுக்கு என்ன பயன்?
இதற்கான பதிலை முந்தையப் பதிவில் பார்த்தோம் (படிக்க). பல வகையான வரிகள் வசூலிக்கப்படுவதை தவிர்த்து, இவை அனைத்துக்கும் சேர்த்து ஒரே ஒரு வரி மட்டும் வசூலிப்பதுதான் சரக்கு மற்றும் சேவை வரி என்பது. அதாவது ஜிஎஸ்டி வரி (Goods and Services Tax) எனப்படுவதாகும்
ஜி.எஸ்.டி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதையும், பிரதமர் பெருமிதமடைந்துள்ளதையும் நமது பத்திரிக்கை.காமில்  வெளியிட்டு உள்ளோம் (படிக்க).
தற்போது, ஜி.எஸ்.டி மசோதா பயணிக்க உள்ள ஏழு கட்டங்களை தெரிந்துக் கொள்வோம்:
1. லோக்சபாவில் (மக்களவை) மீண்டும் ராஜ்ய சபையில் (மாநிலங்களவை) செய்யப்பட்ட திருத்தங்கள்  குறித்து  விவாதிக்கப்பட்டு ஒருமித்த முடிவு எட்டப்பட வேண்டும். பெரும்பாலும் இது விரைவில் முடிந்துவிடும். ஒருவேளை முடிவு எட்டப்படவில்லையெனில் ஒரு பாராளுமன்றக் குழு அமைக்கப்பட்டு திருந்தங்கள் செய்யப்படும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் கம்மி.
2. திருத்தங்கள் லோக்சபையில் ஒப்புதல் அளித்தபிறகு, ஒவ்வொரு மாநில சட்ட்சபையிலும் இந்த மசோதா குறித்து விவாதம் நடத்தப்பட்டு, 50 % மேற்பட்ட மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
அதாவது 15 மாநிலங்களில் சாதகமாக முடிவு கிடைக்க வேண்டும். பா.ஜ.க. 13 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. மேலும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இதற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் உள்ளன.
தமிழகம் அரசு மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. எனினும் லோக்சபையில் எதிர்த்து வாக்களிக்காமல், வெளிநடப்பு செய்துவிட்டது.
4. அதன் பிறகு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பிவைக்கப்படும். ஏப்ரல் ஒன்று அன்று சட்டமாக மாறும்.
5. அதன் பிறகு, மத்தியமாநில அரசுகளின் பிரதிநிதிகள் கொண்ட ஜி.எஸ்.டி கவுன்சில் 60 நாட்களுக்குள் அமைக்கப்பட வேண்டும்.
6. ஜி.எஸ்.டி குழு, தற்போது 18% என நியமிக்கப்பட்டுள்ள வருவாய் சமப்படுத்தும் வீதத்தை முடிவுசெய்ய வேண்டும்
7. ஒவ்வொரு மாநிலமும் சொந்த ஜி.எஸ்.டி சட்டத்தை இயற்ற வேண்டும்.
 
குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்குள் மாநிலங்களுடன் ஒரு உடன்பாடு எட்டிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சட்டம் ஜம்மு காஷ்மீரில் செல்லுபடியாகாது. அந்த மாநில அரசு ஒரு சிறப்பு சட்டத்தினை இயற்ற வேண்டும்.
மொத்தம் மூன்று சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். மத்திய ஜி.எஸ்.டி சட்டம், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி சட்டம், 29 மாநிலகளுக்கான ஜி.எஸ்.டி. சட்டம்.
முதல் இரண்டு சட்டங்கள் பாராளுமன்றத்திலும், மூன்றாவது சட்டம் 29 மாநிலங்களிலும் இயற்றப்பட வேண்டும்.