கோவை:
கோவை ஈஷா மைய பக்தைகள் கீதா மற்றும் லதா ஆகியோரிடம் அவர்களது பெற்றோரின் புகாரை அடுத்ுது கோவை எஸ்.பி. விசாரணை நடத்தினார்.
கோவை வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மையத்தை நடத்திவருகிறார்  பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ். இவரது மையத்தில் கீதா மற்றும் லதா ஆகிய சகோதரிகள், சந்நியாசம் பெற்று வாழ்கிறார்கள்.

 கீதா, லதா
கீதா, லதா

இவர்களது தந்தை காமராஜ் மற்றும் தாயார், சில நாட்களுக்கு முன் கோவை மாவட்ட ஆட்சியரிடம், ஈஷா மையம் குறித்து புகார் அளித்தனர்.  தங்களது மகள்கள் கீதா, லதா ஆகியோரை மூளைச்சலவை செய்து, அம் மையத்தில், ஜக்கி வாசுதேவ் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்கள் மட்டுமின்றி பலரும் அமமையத்தில் துன்புறுத்தப்படுகவதாகவும் அப்புகாரில் தெரிவித்திருந்தனர்.
இந்த விவகாரம் சமூகலவைதளங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், கீதா மற்றும் லதா ஆகியோரிடம், கோவை மாவட்ட எஸ்.பி .   விசாரணை மேற்கொண்டார்.
வெள்ளியங்கிரி மலையில் இருக்கும் ஈஷா யோகா மையம், வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறது என்பது உட்பட பல்வேறு புகார்களுக்கு ஆளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.