பரிதாபாத்:
இரண்டு தலித் பெண் களை நிர்வாண மாக்கி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அரியானா மாநில அரசை, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அரியானா மாநிலம் பரிதாபாத் அருகில் நேற்று முன்தினம் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து சித்திரவதை செய்தது ஒரு கும்பல். இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூகவலை தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“பசு மற்றும் அதன் கன்று ஒன்றை கடத்த முயன்றதால் அந்த இரு தலித் பெண்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டது” என்கிற குறிப்போடு அந்த வீடியோ பரவியது.
அந்த இரு பெண்களையும் தாக்கியது இந்துத்துவ அமைப்பினர் என்றும், மாநிலத்தில் நடைபெறும் இந்துத்துவ அரசு இதுவரை குற்றவாளிகளை கைது செய்ய முயற்சிக்க வில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.