அசாம்:
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்ததால் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
அசாம் காசிரங்கா தேசிய வன உயிரியல் பூங்காவில் மழையால் பாதிக்கபட்ட 3 காண்டாமிருக குட்டிகள் காப்பாற்றப்பட்டுள்ளன.

அசாம் வெள்ளப்பெருக்கு அங்குள்ள வனவிலங்கு சரணாலயத்தையும் விட்டு வைக்க வில்லை. சரணாலயத்தில் உள்ள விலங்குகள் அனைதும் பாதுகாப்பான இடம் நோக்கி சென்றுள்ளன. நூற்றுக்கணக்கான விலங்குகள் அருகிலுள்ள கர்பி அங்லாங் பகுதியில் அமைந்துள்ள உயரமான குன்றுகளுக்கு சென்று விட்டன. மேலே செல்லமுடியாத விலங்குகளை வன அதிகாரிகள் மீட்டு உயரமான பகுதிக்கு அனுப்பி விடுகின்றனர்.
வெள்ளம் காரணமாக உயரமான பகுதிகளுக்கு செல்லமுடியாத 3 காண்டாமிருக குட்டிகள், 7 மான்கள் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். மேலும் விலங்குகள் பாதிக்கப்படாதவாறு பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறினர்.
Patrikai.com official YouTube Channel