டிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியிருக்கும் கபாலி திரைப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் இன்று  நியூஸ் 18     தனியார் தொலைக்காட்சிக்கு   பேட்டியளித்தார்.
அப்போது அவர், “கபாலி என்ற பெயர் சினிமாவில் அடியாள் வேடத்துக்கு வைக்கப்பட்டது. பிறகு காமெடியன்களுக்கு வைக்கப்பட்டது.  இந்த பெயரை ஏன் நாயகனுக்கு வைக்கக்கூடாது என்று நினைத்தேன். முந்தைய படங்களில் இதற்காக முயன்றேன்.  பழைய பெயராக இருக்கிறது என்று மறுத்துவிட்டார்கள்.
1
ரஜனியிடம் ஸ்கிரிப்பை கொடுத்தபோதும், மூன்று பெயர்களைச் சொன்னேன். அவர், “கபாலி.. நன்றாக இருக்கிறதே” என்று அதையே வைக்கச் சொன்னார்.
கபாலி என்றால் கபாலீஸ்வரர் என்று நினைக்கிறோம்.  கபாலன்  என்பது புத்தரின் பெயர்களுள் ஒன்று.  சென்னை கபாலீஸ்வரன் கோயில்கூட புத்தவிஹாராக இருந்ததுதான் என படித்திருக்கிறேன்” என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்தார்.
மேலும், “ கபாலி ,  பிரச்சார படம் அல்ல. எனக்கு பிரச்சாரத்தில் நம்பிக்கை இல்லை. பாம்பு பால் குடிக்காது என்பதே உண்மை.  ஆனால்  பாம்பு பால் குடிக்கிறது என்று நம்புகிறோம். பலவித கதைகள் மூலம் அப்படியோர் பிம்பத்தை நம் மனதில் கட்டமைத்திருக்கிறார்கள். இது போலவே விசயங்களை, நம்பிக்கையின்பால் மக்களின் மனதில் விதைக்க விரும்புகிறேன்” என்றார் பா. ரஞ்சித்.