Radhakrishnan KS அவர்களின் முகநூல் பதிவு:
”சுதந்திரத்தமிழீழத்தை என் கண்கள் காணவேண்டும் அதனால் இறந்தபின் என் கண்களை தானம் செய்துவிடுங்கள்“ என்று தன் இறுதி ஆசையை நீதிமன்றத்தில் சொன்னதற்காய் ஜூலை-25 அன்று வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து ”குட்டிமணியின்“ கண்கள் உயிருடனிருக்கும்போதே சிங்களக்காடையர்களால் பிடிங்கி புத்தனின் காலடியில் போடப்பட்டதே அதை மறப்போமா?
குட்டிமணி என அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர் முன்னாள் தமிழீழப் போராட்ட இயக்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர்.
யோகச்சந்திரன் வல்வெட்டித்துறையில் செல்வராஜா – அன்னமயில் ஆகியோரின் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.
குட்டிமணி 1970களில் தங்கத்துரையுடன் சேர்ந்து இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். 1979 இல் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.
குட்டிமணி 1970களில் தங்கத்துரையுடன் சேர்ந்து இலங்கை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். 1979 இல் தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஆயுதப் போராட்டக் குழுவை ஆரம்பித்தார்.
1981 ஆம் ஆண்டில் குட்டிமணி, தங்கத்துரை, யோகன் உட்படப் பலர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்டார்.
கொழும்பு சிறையில் இவர் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, 1983 ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்ற போது சிங்கள கைதிகளினால் மற்றொரு டெலோ தலைவர் நடராஜா தங்கத்துரையுடனும், மேலும் 51 தமிழ்க் கைதிகளுடனும் சேர்த்துப் படுகொலை செய்யப்பட்டார்.