பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் என்றாலே சினிமாவுக்கு எதிரானவர் என்கிற தோற்றம் உண்டு. திரைப்படங்களை எதிர்த்து அவர் பேசியதை தொகுத்தால் பத்து முழு நீள ஆவணப்படங்கள் எடுக்கலாம்.  அவரது திரை எதிர்ப்பின் உச்சன், ரஜினியின் பாபா படம் வெளியானபோது நடந்தது.
அந்த காலகட்டத்தில்  ரஜினிக்கு எதிராக அவர் வி்ட்ட அறிக்கைகளும், அவரது கட்சியினரின் (பாபா) நடவடிக்கைகளும் நாடறிந்தது.
வார்த்தைகளை அளந்துவிடும் ரஜினியே, “ராமதாஸ் எனும் ராட்சன்” என்கிற அளவுக்கு பேசினார்.   இதனால் உந்தப்பட்ட  ரஜினி ரசிகர்கள், மதுரையில்  ராமதாஸூக்கு   கறுப்பு கொடி கொடி காட்டப்போய், பா.ம.க.வினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.  அவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரிக்க இருப்பதாக அறிவித்த ரஜினி அப்புறம் அதை மறந்தே போனார். (   பிறகு, தனது மகள் திருமணத்துக்கு ராமதாஸூக்கு அழைப்பு விடுத்து அன்பானது தனிக்கதை.)

ராமதாஸ்
ராமதாஸ்

இப்படிப்பட்ட ராமதாஸ்,  ஒரு படத்தை பார்க்க விரும்பியிருக்கிறார் ராமதாஸ் என்பது ஆச்சரியம்தானே!
அந்த படம்… “அப்பா”!
சமுத்திரகனியின் இயக்கம், நடிப்பு, தயாரிப்பில் வெளியாகி மக்களிடையே பரவலான வரவேற்பை பெற்ற இந்த “அப்பா” திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ராமதாஸ்.
“கல்வியின் சிறப்பு, அரசுப் பள்ளிகளின் அவசியம், குழந்தைகளை நடத்த வேண்டிய முறை.. இப்படி பல நல்ல விசயங்களை அந்த படத்தில் காட்சிகளாக அமைத்திருக்கிறார் சமுத்திரகனி. இதைக் கேள்விப்பட்டுத்தான், அந்த படத்தை பார்க்க விரும்பினார் ராமதாஸ்” என்கிறார்கள் பாமக வட்டாரத்தில்.
"அப்பா" படத்தில் சமுத்திரகனி
“அப்பா” படத்தில் சமுத்திரகனி

“இன்று மாலை சென்னை தேவி ஸ்ரீதேவி ப்ரிவ்யூ திரையங்கில் ராமதாஸுக்காக ஸ்பெஷலாக அப்பா படத்தை திரையிட ஏற்பாடு செய்திருக்கிறாராம் சமுத்திரகனி” என்கிறது கோடம்பாக்கத்து செய்தி.