சென்னை:
ந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 8.30 மணணிக்கு 29 பேருடன் அந்தமான் நோக்கி சென்ற விமானம் மாயமானதாக தெரிய வந்துள்ளது.

காணாமல் போன  அதே ரக விமானம் (மாதிரி)
காணாமல் போன அதே ரக விமானம் (மாதிரி)

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘AN-32’ ரக விமானம் அந்தமான் – நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளையர் நோக்கி  சென்றது. புறப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக  விமானிகள் உள்பட 29 பேருடன் சென்ற அந்த விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வருகின்றன.