சென்னை:
தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறையை கடன் வாங்குவதன் மூலம் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தமிழக நிதித் துறை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் திருத்திய நிதிநிலை அறிக்கை தமிழக நிதிஅமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, தமிழக நிதித் துறை செயலாளர் சண்முகம் கூறியதாவது:
ஒட்டுமொத்த மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழகத்தின் கடன் அளவு 18.43% ஆகும். நிதிப் பற்றாக்குறையை கடன் வாங்குவதன் மூலம் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் புதிதாக 5 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டில் சமூக நலத் திட்டங்களுக்கு 35 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் மானியம் ரூ.68,111 கோடியாகும். தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை வரையறுக்கப்பட்ட 3 சதவீதத்தின் கீழ் 2.9% ஆகவே உள்ளது.
வாட் வரியை மறு சீரமைக்காததால் பெட்ரோலியப் பொருட்கள் மூலம் வரும் வருவாய் மந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதார மந்த நிலை காரணமாகவே தமிழகத்தின் நிதி வருவாய் குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.