
தினமலர் நாளிதழின் நிறுவனரான டி.வி. ராமசுப்பு, 1908ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். தனது 43ம் வயதில் தினமலர் நாளிதழை துவங்கினார்.
இன்றைய குமரி மாவட்டமான, அன்றைய நாஞ்சில் நாடு, கேரளாவின், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்தது. ‘தமிழர்கள் பெருவாரியாக வாழும் நாஞ்சில் நாட்டை, தாய் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்; திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் வாழும் தமிழர்களின் உரிமைகளை காக்க வேண்டும்’ என்று அங்குள்ள தமிழ் மக்கள் உரிமைக்குரல் எழுப்பத் துவங்கியிருந்தனர். அவர்களின் குரலை ஓங்கி ஒலிக்க, கருத்துக்களுக்கு களம் அமைக்கவே தினமலர் நாளிதழை டி.வி. ராமசுப்பு துவங்கினார்.
அதுவும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலேயே, துணிச்சலாக, ‘தினமலர்’ நாளிதழை துவக்கினார். அதுவும் மலையாளிகள அதிகம் வசிக்கும் பகுதி அது.
நாஞ்சில் பகுதியை தாய்த்தமிழக்ததுடன் இணைக்க நடந்த போராட்டம் வெற்றி பெற்றதில், டி.வி. இராமசுப்புவின் பங்கும் மிகக் குறிப்பிடத்தக்கது.
தனது இதழியலில் தார்மீகநெறியை வகுத்துக்கொண்டிருந்தார் டி.வி. ராமசுப்பு.
‘தினமலர்’ முதலாண்டு நிறைவு நாளில் அவரது தலையங்கத்தில் இருந்து…
‘வகுப்புவாதிகள், மதவெறியர்கள், பிற்போக்கு கும்பல்கள், நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள், தமிழினத்திற்கு துரோகம் செய்பவர்கள் எமது விரோதிகள். இவர்களை முறியடிப்பதில், ‘தினமலர்’ முன்னணியில் நின்று பணியாற்றும்!’
Patrikai.com official YouTube Channel