சென்னை:
கொலை செய்யப்பட்ட  பெண் என்ஜினீயர் சுவாதி முஸ்லீமாக மதம் மாற இருந்ததாக  திருமாவளவன்  கூறி உள்ளார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்?

எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு
எச்.ராஜா உருவ பொம்மை எரிப்பு

அவரை மதம் மாற சொன்ன பையன் யார்?  அவர் இந்துவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சுவாதியை கொலைசெய்துவிட்டதாக பேசுகிறார்கள். இப்போது அதை திசைதிருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு?  இதுபற்றி போலீசார் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும் பா.ஜ.க.தேசிய செயலாளர்   எச் ராஜா கூறியிருந்தார்.
அதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்  சென்னை கொரட்டூரில்  எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.  போலீசார் விரைந்து வந்து எரிந்துகொண்டிருந்த பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.  ஆர்ப்பாட்டக்காரர்களை  விரட்யடித்தனர்.