சென்னை:
மிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு விவரங்கள் அடங்கிய பட்டியலை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. ஆனால் சென்னை மாநகராட்சி பள்ளிகள் கலந்தாய்வு பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களின்   மாறுதலுக்கு பொது கலந்தாய்வு  நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு போன்றவற்றுக்கு விருப்பமுள்ளவர்கள்  ஜூலை 19ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்  என  ஏற்கனவே  அறிவித்துள்ளது.
இந்த வருடம்  பொது மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்டு 6ந்தேதி முதல் செப்டம்பர் 4ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறுகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.
விவரம்:
6.8.16 – மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு
7.8.16 – மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
13.8.16 – உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்
20.8.16 – முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
21.8.16 – முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
22.8.16 – முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு
23.08.16 – உடற்கல்வி, இடைநிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
24.08.16 – உடற்கல்வி, இடைநிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்
03.9.16 – பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
04.9.16 – பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
*தொடக்கக் கல்வி துறை:*
03.08.2016 – உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
04.08.2016 – உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
06.08.2016 – நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
07.08.2016 –  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு
13.08.2016 – இடைநிலை ஆசிரியர் பணி நிரவல்
14.08.2016 – பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு & இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்.
20.8.2016 – பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
21.08.2016 – இடைநிலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
ஆனால் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர்கள் 10 ஆண்டு களுக்கும் மேலாக  ஒரே இடத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாறுதல் வழக்கப்படுமா என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவர்களை  இடம் மாற்றி விட்டு பொதுகலந்தாய்வு நடத்தவேண்டும் என பெரும்பாலான சென்னை மாநகராட்சி ஆசிரியர்கள்  எதிர்பார்க்கிறார்கள்.