தேனி:
ரண்டு சக்கர வாகனம் மோதி மாணவர் இறந்ததால், அந்த பகுதிபெண்கள் திரண்டு அருகிலிருந்த அரசு மதுபானக்கடையை அடித்து உடைத்தனர்.
சம்பவத்தன்று இரவு தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்குமார்  தேனியில் இருந்து பூதிப்புரத்திற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.  ஆதிபட்டி  என்ற ஊர் அருகே வரும்போது  இரு சக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.
theni tasmac
மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ்குமார் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது உடல் சொந்த ஊரான வாழையாத்துப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
விபத்துக்கு காரணம், அருகிலுள்ள டாஸ்மாக் கடைதான் என அந்த கிராம பொதுமக்கள் உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டம் செய்தனர்.
டாஸ்மாக் மதுபானக்  கடையை  உடனே  அங்கிருந்து அகற்ற வேண்டும்  என்றும், மதுவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால்தான் விபத்து ஏற்படுகிறது என்றும், டாஸ்மாகை மூடு என   கோசமிட்டு சில பெண்கள் டாஸ்மாக் கடையை கற்கலால் தாக்கினர்.  இதில், கடையில் இருந்த மது பாட்டில்கள் உடைந்து சிதறின. இதன் காரணமாக மதுபானக் கடையை  ஊழியர்கள்  மூடிவிட்டு  ஓடினர்.
போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் பெண்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு இறந்த  மாணவரின் உடலை பெற்றுக்கொண்டனர்.
விபத்தில் இறந்த வினேஷ்குமார் பிளஸ்-2 படிக்கும் மாணவர் என்பது குறிப்பிடத்தககது.