திருமணத்திற்கு பின் தேனிலவுக்கு செல்வது அனைவரின் கனவு.
தன் திருமணத்திற்கு எங்கு தேனிலவிற்கு செல்லவேண்டும் என பல கனவுகளுடன் இருப்பது மனிதரின் வாடிக்கை. மேலும் தன் தேனிலவுப்பயணம் மறக்கமுடியாததாக அமையவேண்டும் என்பது அனைவரின் ஆசை.
ஒருப் பெண்ணின் வித்தியாசமான தேனிலவு அனுபவத்தைப் பார்ப்போம்.
தன் காதல் கணவனின் விசா தள்ளுபடி செய்யப்பட்டதால் தன் தேனிலவிற்கு தனியே சென்றார் ஒரு பாகிஸ்தான் பெண்.
அதன் விவரம்:
ஹூமா மோபின் எனும் பாகிஸ்தான் பெண் ( விளம்பர ஏஜன்சி நடத்துபவர்) தான் காதலித்த அர்சலன் சேவெரை (கட்டிடப் பொறியாளர்) ஏழு மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்துக்கொண்டார்.
அவர் தேனிலவிற்காக தன் கணவர் மற்றும் உறவினருடன் “கிரீஸ் (Greece)” நாட்டிற்குச் செல்ல விசாவிற்காக விண்ணப்பித்திருந்தார்.
மிகுந்த அலைச்சலுக்கு பின்னர், ஒருவழியாய் ஹுமாவிற்கு விசா கிடைத்துவிட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக அவரது கணவர் சேவரின் விசா தள்ளுபடி ஆனதால் மனம் வெதும்பினார்.
எனினும், கிடைத்த விசாவினை வீணாக்க வேண்டாமென குடும்பத்தினர் அறிவுரை வழங்க, கணவரை விட்டுவிட்டு இவர்மட்டும் தன் உறவினர்களுடன் பயணப்பட்டார்.
தான் பயணித்த இடங்களில் எல்லாம் கணவனைப்பிரிந்து வந்த துயரை வெளிக்காட்டும் வண்ணம் தன்னுடைய புகைபடங்களை எடுத்தார்.
அந்தப் படங்களைத் தொகுத்து ஒரு ஆல்பன் தயார் செய்தார்.
சோதனை மேல் சோதனையாய்.. க்ரீஸ் சென்ற அவர் தன் அலைபேசியையும் தொலைத்து விட்டார்.
கீழே அவர் வெளியிட்டுள்ள படங்களைப் பாருங்கள்…