சென்னை:
சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஞானசேகர் கொலை வழக்கில் நால்வர் இன்று மாலை சரண்டர் ஆனார்கள்.

கொலையான கவுன்சிலர் ஞானசேகர்
கொலையான கவுன்சிலர் ஞானசேகர்

சென்னை மணலி எட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ரா.ஞான சேகர்(50). சென்னை மாநகராட்சி 21-வது வார்டு அதிமுக கவுன்சிலர். இவர் மணலி பாடசாலை பகுதியில் நேற்று மாலை நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஞானசேகரை வழிமறித்து சரமாரியாக வெட்டினார்கள்.  இதில் சம்பவ இடத்திலேயே ஞானசேகர் இறந்துவிட்டார். கொலையாளிகள் தாங்கள் வந்த பைக்கிலேயே தப்பிச் சென்றனர்.
இந்த நிலையில் இன்ற மாலை, மாதவரம் பால்பண்ணையை சேர்ந்த ஜெபக்குமார் ,ராஜேஷ் ,ராஜிவ், பிரபு ஆகியோர் சரண் அடந்தனர்.