சென்னை:
தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், தமிழகத்திலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது. இந்த நிலையில், வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கில் உருவான காற்று சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால், தமிழகத்தில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக,கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி ,வேலூர் ஆகிய இடங்களில் கூடுதலாக மழை பெய்யும் என்றும். சென்னையில் மேகம் மூட்டமாக காணப்படும். இரவில் இடியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.