மாவட்ட செய்திகள்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் விடுதலை மீட்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவியின் பெற்றோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் சலோமியா. கல்லுரி மாணவியான சலோமியா கடந்த 2–5–2016 அன்று திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பன்றி மலைப்பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை தொடர்பாக அழகுசேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த அழகுபத்மநாதன், ஜெயபாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனரர். மாணவி கொலயில் தொடர்புடைய மற்றொரு வாலிபரையும் உடனடியாக கைது செயய் வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரினர்.
Patrikai.com official YouTube Channel