கடந்த வருடம் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது. நீர்நிலைகள் ஆக்கிரமிக்கபப்பட்டதே தண்ணீர் ஊருக்குள் புகுந்ததற்கு காரணம். இதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள், கம்பெனிகள், கல்லூரிகள் போன்ற ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு சூரம்பட்டி பெரும்பள்ளம் அணைக்கட்டு பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கும் அணைப்பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்களை கட்டி பொதுமக்கள். குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் சுமார் 123 குடியிருப்புவாசிகளுக்கு வீடுகளை 4ந்தேதிக்குள் காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அரசின் கெடு 4ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஆக்ரமிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து வீடுகளை காலி செய்வதால் வீடுகளை இடிக்கும் பணியை 8ம் தேதி முதல் துவங்க பொதுப்பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர். வரும் 15ம் தேதிக்குள் நீர்பிடிப்பு பகுதியின் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் இடித்து அப்புறப்படுத்தி விட்டு அதன் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்யிருப்பதால் 8ந்தேதிமுதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
Patrikai.com official YouTube Channel