சென்னை:
தீபாவளி பண்டிகைக்களுக்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்தில் விற்று தீர்ந்தது.  பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே விற்றுத் தீர்ந்ததால்,  ரயில் நிலையங்களில் வரிசையில் நின்ற பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
அக்டோபர் மாதம் 29ம் தேதி தீபாவளி விடுமுறைக்கு செல்வதற்கு ஏற்ப இன்று காலை 8 மணிக்கு ரயில் முன்பதிவு தொடங்கியது.  முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களிலேயே கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, முத்துநகர், பொதிகை, பாண்டியன், ராமேசுவரம், ஆகிய தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.
rail_jpg_1439248f
 பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் முன்பதிவு செய்ததனர். இதனால் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் வரிசையில் முதலில் நின்ற 10 நபர்களுக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது. மற்றவர்களுக்கு காத்திருப்போர் பட்டியலில்தான் டிக்கெட் கிடைத்தது.
“95 சதவிகித டிக்கெட்டுகள் ஆன்லைனிலேயே வாங்கப்படுகின்றன. டிராவல் ஏஜென்சி நடத்துவோரும் மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வதாக புகார் எழுகின்றன. இதனால் வரிசையில் நிற்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. ஆகவே 70 சதவிகித டிக்கெட்டுகளை மட்டும் ஆன்லைனில் வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  30 சதவிகித டிக்கெட்டுகளை ரயில்வே கவுண்ட்டர்களில் கொடுக்க வேண்டும்” என்று வரிசையில் நின்று ஏமாந்த பயணிகள் தெரிவித்தனர்.