பீகார் மோசடி: தேர்வில் முதலிடத்தை பெற்ற  ரூபி ராய்  மறுதேர்வில் தேர்ச்சியடையவில்லை. பள்ளி தாளாளர் கைது


முதலிடத்தைப் பெற்றவர்கள் அவர்களது பாடத்தைப் பற்றி விளக்க கஷ்டப்பட்டதால் அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது. பீகார் பள்ளி தேர்வு வாரியம் (BSEB) நடத்திய மாநிலத்தின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் கலை பாடப்பிரிவில் முதலிடத்தை பெற்ற ரூபி ராய் மறு-தேர்வில் தேர்ச்சியடையாததால் போலிசாரால் கைது செய்யப்பட்டார் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.


பீகார் பள்ளி தேர்வு வாரியம் பன்னிரெண்டாம் வகுப்பு கலை மற்றும் அறிவியல் பிரிவின் முதலிடத்தைப் பிடித்தவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்து இரண்டு பிரிவிகளிலும் முத ஏழு இடங்களைப் பிடித்தவர்களை அழைத்து மறு-தேர்வு வைத்தததில் அவர்களுக்கு அடிப்படைக் கேள்விகளுக்கு விடை அளிக்கத் தெரியவில்லை என்று ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளது. “கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்த ஏழு பேர், மொத்தம் 14 பேரும் தேர்வு முடிவுகளை சரிபார்க்க ஜூன் 3 ம் தேதி அன்று ஒரு நிபுணர்கள் குழுவால் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டனர். அவற்றின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது,” என்று BSEB செயலாளர் ஹரிஹர் நாத் ஜா கூறினார்.

bihar 2
மறு-தேர்விற்கு வரவழைக்கப்பட்டவர்களில் கலை பிரிவில் முதலிடத்தைப் பிடித்த ரூபி ராய் மற்றும் அறிவியல் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த சவுரப் குமார் ஆகியோரும் அடங்குவர் என்று அவர் கூறினார்.

முன்னர் சில செய்தி சேனல்கள், மாநிலத்தின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் மனிதவியலில் முதலிடத்தைப் பிடித்த மாணவி “போலிடிகல் சயின்ஸ்” என்பதை உள்நோக்குடன் ‘ப்ராடிகல் சயின்ஸ்’ என உச்சரித்து அது சமையல் தொடர்பான ஒரு பாடம் என விவரித்தாக காட்டினர். இதேபோல், அறிவியல் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவர் புரோட்டன் மற்றும் எலெக்ட்ரான் மற்றி தெரியாமல் இருந்திருக்கிறார்.


முதலிடத்தைப் பிடித்த இருவரும் வைஷாலி மாவட்டத்தின் பகவான்புரின் உள்ள பிஷன் ராய் கல்லூரியைச் சேர்ந்தவராவர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதைய கல்வி அமைச்சர் பி.கே.ஷாஹி, நிறுவனத்தில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடப்பதாக கிடைத்த புகார்களினால் அதன் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தார்.
மாநில கல்வி அமைச்சர் அசோக் சவுத்ரி, தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் வாரியம் இவ்வளவு பொறுமையாக காலம் கழிந்து செயல்படுவது பற்றி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

bihar 4

பல்வேறு மாணவர்கள் மறுதேர்விற்கு அழைக்கப்பட்டதில்., இந்த குறிப்பிட்ட பள்ளியைச் சேர்ந்த மூன்று பேர் தவிர மற்றவர்கள் தேர்ச்சி பெற்றனர். ரூபா தேவி உடல்நிலையைக் காரணம்காட்டி தேரிவில் கலந்துக் கொள்ளவில்லை.

bihar 3

இந்த ஆண்டு இந்தப் பள்ளியில் பயின்ற 646 மாணவர்களில்  534 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலம் முகழுவதும் 67 சத  தேர்ச்சி உள்ளபோது இந்தப் பள்ளியில் மட்டும்  97 சத தேர்ச்சி விமர்சனத்திற்கு உள்ளானது. முதலிடம் பிடித்த மாணவர்களில் ஒருவரான ஷாலினி இவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாலினியும் மறுதேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.

bihar exams candal

இந்தப் பள்ளியின் தாளாளர் பிஷுன் ராய் என்பவர்  லாலு பிரசாத்தின் கட்சிக்கு நெருக்கமானவர் எனும் புகாரை லாலு மறுத்துள்ளார். போலிசார் வழக்கு பதிவு செய்து இவரை கைது செய்துள்ளனர்.