கோபா அமெரிக்கா 2016: அமெரிக்காவை வென்று இறுதிப்போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது.
அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடந்த அரை இறுதி போட்டியில் அமெரிக்காவும் அர்ஜென்டினாவும் மோதின.
சொந்த நாட்டில் விளையாடும் அமெரிக்க அணி இதில் வென்று நிச்சயமக இறுதிப்போட்டிக்குச் செல்லும் எனற எதிர்பார்ப்புடன் அமெரிக்கர்கள் போட்டியைக் கண்டனர். மறுபக்கம் உலக அளவில் முதன்மையான வீரரான மெஸ்ஸி தலைமை ஏற்று விளையாடிய அர்ஜென்டினா அணி, உற்சாகத்துடனே களம் இறங்கியது.

போட்டி ஆரம்பித்தது முதலே அந்த அணி, கோல் போடும் முனைப்புடன் விளையாடியது. மூன்றாவது நிமிடத்தில் லவிஜி அடித்த அருமையான கோல் மூலம் அர்ஜென்டீனா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
மெஸ்ஸியின் அற்புதமான பிரீ கிக் மூலம் அர்ஜென்டினா தனது இரண்டாவது கோலை அடித்தது.
போட்டியின் இரண்டாவது பாதியில் ஹிகுயின் மேலும் இரண்டு கோல் அடிக்க , அர்ஜென்டீனா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது இதன் மூலம் அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
Patrikai.com official YouTube Channel