நடைபாதைகள் உட்பட பொது சாலைகளில் ஆக்கிரமிக்கும் மத கட்டமைப்புகள் “எந்த வடிவத்தில்” இருந்தாலும் அதனை நகர்த்தவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ உத்தரப் பிரதேச அரசிற்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள், வீதிகள், பாதைகள், சந்துகள் உட்பட பொது சாலைகளில் மத கட்டமைப்புகள் அமைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுவது குற்றவியல் அவமதிப்பாக நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளால் கருதப்படும் என்று ஒரு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ நீதிமன்றத்தின் நீதிபதி சுதிர் அகர்வால் மற்றும் நீதிபதி ராகேஷ் ஸ்ரீவத்ஸவா, 2011 க்கு பிறகு கட்டப்பட்டு பொதுச் சாலைகளை ஆக்கிரமிக்கும் எந்த மதக் கட்டமைப்பாக இருந்தாலும் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும் இரண்டு மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதியால் ஒரு உடன்பாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முன்னதாக எழுப்பப்பட்ட கட்டமைப்புகள் நீக்கப்பட வேண்டும் அல்லது தனியார் இடங்களுக்கு மாற்றப்படும் வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
லக்னோ மாநிலம் மொஹல்லா தௌடா கேராவின் 19 உள்ளூர் மக்கள் கொடுத்த ரிட் மனுவை ஏற்ற நீதிமன்றம் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது. வழித்தடத்தின் நிலம் கோவில்கள் கட்டுவதற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். மத சார்பான செயல்களைச் சுதந்திரமாகச் செய்ய மக்களைத் தடுப்பதால், இது மக்கள் நடமாட்டத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று உயர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
அத்தகைய நடவடிக்கைகள் சாலைகளில் போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் அதற்காகக் கண்டறியப்பட்ட இடங்களில் அல்லது அந்தக் குறிப்பிட்ட மதப் பிரிவுகளுக்குச் சொந்தமான இடத்திலோ அல்லது ஏதாவது தனியார் இடத்திலோ அத்தகைய நடவடிக்கைகள் செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக நீதிமன்றம் கூறியது.
ஜூன் 10, 2016 க்குப் பின்னர், “அந்தந்த துணைப் பகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை கலெக்டர்கள் / கலெக்டர்கள் மட்டுமல்லாமல் வட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர்/ உயர் போலீஸ் கண்காணிப்பாளர், சாலைகள் (நெடுஞ்சாலைகள் உட்பட) பராமரிப்பு பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் உட்பட அனைவரும், எந்த மதம், இனம், சாதி, சமய உட்பிரிவு மற்றும் பகுதியைச் சார்ந்தவர்களாலும் எந்த விதமான மத கட்டமைப்புகள் எழுப்பப்பட்டு அத்துமீறல் நடைபெற கூடாது என்பதை பொறுப்பாகக் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது “, பிடிஐ செய்திகளின் படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து விலகியோ அல்லது ஒத்துழைக்காமல் எவரேனும் நடந்தால், அது ஒரு திட்டமிட்ட குற்றவியல் அவமதிப்பாகக் கருதப்படும்.