புதுடில்லி:
ரண்டாவது முறையாக தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என ரகுராம் ராஜன் அறிவித்திருப்பது நாட்டிற்குத்தான் இழப்பு என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

மீண்டும் ரிசர்வ் ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என்று ரகுராம்ராஜன் தெரிவித்திருப்பது  குறித்து பல்வேறு மூத்த அரசியல் தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவம் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது:
“பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் விலக இருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது.  இரண்டாவது  முறையாக ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என்ற அவரது முடிவு எனக்குள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், இது எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு அல்ல. ஒரு மிகச்சிறந்த பொருளாதார வல்லுனரை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் மத்திய அரசு விமர்சனம் செய்திருக்கிறது. நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல இந்த அரசுக்கு டாக்டர். ரகுராம் ராஜன் தேவையில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. இது இந்தியாவிற்குத்தான் இழப்பு” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரகுராம் ராஜன் கடந்த 2013-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்த போது ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.
b
தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, “ரகுராம் ராஜனின் சிறப்பான பணியை அரசு பாராட்டுகிறது. அவரின் கருத்துக்கு மத்திய அரசு உரிய மதிப்பளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
“அடுத்த கவர்னர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்”  என்றும்  அவர் தெரிவித்தார்.