மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களது முகநூல் பதிவு:
13445424_1217338401618540_7355210764246375579_n
சட்டீஸ்கர் மாநிலம் ரய்காட் மாவட்டத்தில் உல்ஹாஸ் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டச் சொல்லி 30 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கிறார்கள் பென்தாஸே கிராம மக்கள்.அரசாங்கம் கவனிக்கவேயில்லை. அதனால் ஆபத்தான ’கயிற்றுப் பாலத்தில்’ தினமும் இப்படி நடக்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் பல கிலோ மீட்டர் சுற்றிச் சென்றால்தான் பேருந்து நிறுத்தத்திற்கோ ரயிலடிக்கோ செல்ல முடியும் என்ற நிலைமை.
பாலம் கட்டிக் கொடுத்தெல்லாம் மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சியைத் தக்க வைக்க முடியாது என்று சட்டீஸ்கர் அரசுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது போலும்!