எங்க ஊரை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் , சாலைவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆபத்தான கட்டத்தில் அவர் இருந்தபோது, ரத்தம் தேவைப்பட வாட்ஸ்அப், பேஸ்புக்கில் சிலர் “அவசரம்.. ரத்தம் தேவை” என்று தொடர்பு எண்ணோடு பதிய, பலரும் அதை பகிர்ந்தார்கள்.
ரத்தம் கிடைக்க, சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பிவிட்டார். வேலைக்கும் சென்று கொண்டிருக்கிறார்.
இது நடந்தது பத்து மாதங்களுக்கு முன்பு. ஆனால் அப்போது ரத்தம் தேவை என்று பதியப்பட்ட செய்தியை இன்னும் பலர் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஏதோ இப்போதுதான் விபத்து நடந்தது போல பலர் நினைத்துக்கொண்டு, அந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி அண்ணில் தொடர்புகொண்டு விசாரிக்கிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்லி சொல்லியே அலுத்துவிட்டது.
அக்கறையுடன் விசாரிப்பதும், ரத்தம் கொடுக்க தயாராக இருப்பதும் நல்ல விசயம்தான். ஆனால் தேவையில்லாமல் பதறிப்போய் விசாரிக்கிறார்களே.. அவர்களுக்கு நேர விரயம்தானே.
“அவசரம்..” என்று பதிந்தால் அவசரமாக அதை பகிர்ந்துவிட வேண்டுமா.. முழுமையாக படித்துவிட்டு அது என்று அனுப்பப்பட்டது என்பதை கவனித்து பகிருங்கள். அதே போல இனியாவது “அவரசரம் ரத்தம் தேவை” என்பதோடு அன்றைய தேதியையும் சேர்த்து பதியுங்கள்.
https://www.facebook.com/krishnaatq?fref=ts