தமிழ்நாட்டு கோவிலை இடம்பெயர்த்த அரியானா குழு லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது
விழுப்புரம்: ஹரியானாவைச் சேர்ந்த டி.டி.பி.டி(TDBD) இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு கோவிலை 73 அடி தூரத்தில் உள்ள ஒரு புதிய இடத்திற்கு நகர்த்தி லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றது. அந்த நிறுவனம் 250 டன் எடையுள்ள 1,300 சதுரடி கோவிலை கிழக்கு பார்த்து இருக்க வேண்டும் என்பதற்காகச் சுழற்றவும் செய்தது.
“இந்தக் கோவில் அமைப்பு 300 திருகு ஜாக்கள் மற்றும் 250 உருளைகளின் உதவியுடன் புதிய தளத்திற்கு அங்குல அங்குலமாக நகர்த்தப்பட்டது. 13 தொழிலாளர்கள் கொண்ட அணி நவம்பர் 18, 2014 முதல் பிப்ரவரி 28 2015 வரை கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கும் மேலான கால அவகாசத்தில் இந்தப் பணியை நிறைவு செய்தது. அந்த அணி கோவிலைத் திருப்புவதற்கு மட்டுமே 26 நாட்கள் எடுத்துக் கொண்டது ” என்று லிம்கா சாதனைகள் புத்தகத்தின் ஆசிரியர் விஜயா கோஷ் சான்றிதழில் கூறினார்.
ஏற்கனவே இந்த நிறுவனம் கோயம்புத்தூரில் ஒரு பெரிய வீட்டை வெற்றிகரமாகத் தூக்கியத்றகாக லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் 30 அடி உயர மூன்று மாடி கட்டிடத்தை அடித்தளத்தோடு தூக்கி உருளைகள் மற்றும் ஜாக்ஸ் உதவியுடன் 45ft தூரத்தில் ஒரு புதிய தளத்திற்கு நகர்த்தியது. மேட்டுப்பாளையம்-சாய்பாபா கோயில் எம்.தங்கவேலுவிற்குச் சேர்ந்த 400 டன் எடை கொண்ட 2,400sqft வீட்டை, அந்த அணி மார்ச் 15 இல் இருந்து மே 31, 2013 வரை அதாவது 75 நாட்களில் நகர்த்தியது.
சேலம்-சென்னை நெடுஞ்சாலையை அகலமாக்குவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோவில் இடிக்குமாறு கோவில் அறங்காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்குப் பிறகு கல்லக்குறிச்சி தட்சூர் கிராம மக்கள் கோவிலை இடம் மாற்றுவதற்காக இந்நிறுவனத்தின் உதவியை அனுகியதாக இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுஷில் சிசோடியா கூறினார்.
“வேலூர் மாவட்டத்தில் ஒரு கோவிலை அதன் அமைப்போடு முழுமையாக நாங்கள் தூக்கி புதிய இடத்திற்கு நகர்த்தியதை கிராம் மக்கள் கேள்விப்பட்டுள்ளனர். கோவிலை புதிய இடத்திற்கு மாற்றூவது மட்டுமல்லாமல் அது கிழக்கு நோக்கி இருக்க த்ருப்ப வேண்டுமென்றும் கூறினர். நாங்கள் உடனடியாக அவர்களது கோரிக்கையை ஏற்று மூன்று மாதங்களுக்குள் பணியை நிறைவேற்றினோம். புதிய கோயில் புனரமைப்பு செய்ய அவர்களுக்குப் போதுமான நிதி இல்லாததால் நாங்கள் செய்த வேலையில் அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர், ” என்று சிசோடியா கூறினார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோயிலை இடிப்பதற்காக கோயில் சங்கத்திற்கு 1.71 லட்சம் இழப்பீடு வழங்கியது. புதிய தளத்தில், கோவிலின் ஒரு பகுதி அஸ்திவாரத்தை எடுத்து புதிதாகப் புனையப்பட்ட அடித்தளத்தோடு நிறுவனம் வைத்தது. 1999-ல் உருவான TDBD இதுவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஐந்து கோயில்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட கட்டிடங்களை இடம் மாற்றியுள்ளது.