சென்னை:
எஸ்.ஆர்.எம். குழும பெயரை பயன்படுத்தி பெரும் பண மோசடி செய்த மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அக்குழும தலைவர் பாரிவேந்தர் சார்பில் சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேந்தர் மூவிஸ் அதிபர், மதன் திடீரென மாயமான விவகாரத்தில் எஸ்.ஆர்.எம். கல்வி நிலையங்களின் உரிமையாளர் பாரிவேந்தருக்கு தொடர்புள்ளதாக சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸூம், புகார்களை தெரிவித்தார். அதை பாரிவேந்தர் மறுத்து பதிலுக்கு ராமதாஸ் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

இதற்கிடையே, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தியதும் பரபரப்பை அதிகமாக்கியது.
இந்த நிலையில், பாரிவேந்தர் சார்பில், சென்னை காவல்துறை ஆணையாளரிடம், வழக்கறிஞர் வி.பாலு என்பவர் இன்று மனு ஒன்றை அளித்தார். அதில், “எஸ்.ஆர்.எம். குழும பெயரை பயன்படுத்தி வேந்தர் மூவஸ் அதிபர் மதன் பணமோசடி செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel