பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் (rajeshkumar.novelist/posts/630663487086248?pnref=story) அவர்களின் பதிவு:
“இன்னும் 20 ஆண்டுகளில் பூமியை வால் நட்சத்திரம் ஒன்று தாக்கி ஒரு மாபெரும் பிரளயத்தை உண்டாக்கப் போகிறது என்று இங்கிலாந்தை சேர்ந்த விண்ணியல் விஞ்ஞானி கிரகாம் ஹென்ஹாக் திட்டவட்டமாகச் சொல்லியுள்ளார்.
அவர் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில் பூமியின் அழிவு என்பது நெருப்பு அல்லது வெள்ளத்தால் மட்டுமே ஏற்பட்டுள்ளது. 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு வால் நட்சத்திரம் பூமியை தாக்கியதில் பல விலங்கினங்கள் அழிந்து போனது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது.
இப்போது அதே மாதிரியான ஒரு வால் நட்சத்திரம் 2035-ம் ஆண்டு பூமியைத் தாக்கி பெரிய அழிவை உண்டாக்க போகிறது.
இந்த வால் நட்சத்திரத்தின் தாக்கம் என்பது ஓர் அணுகுண்டை வெடிக்க வைக்கும்போது ஏற்படும் விளைவை விட ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும்.
பூமி உருண்டை உடைந்து சின்னாபின்னமாகும் பொது உண்டாகும் புழுதி புயலின் காரணமாக சூரியனின் வெளிச்சம் பூரணமாய் மறைக்கப் பட்டு மாதக் கணக்கில் பூமி இருட்டாக இருக்கும் என்று தனது ஆய்வு கட்டுரையில் தெரியப்படுத்தி எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.