Evening-Tamil-News-Paper_85502266891
னித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கொல்ல, மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விளைவிக்கும், பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கொல்ல அனுமதி கேட்டு  பல்வேறு மாநில அரசுகள், மத்திய அரசிடம் அனுமதி கோரி வந்தன.  இந்த நிலையில்  மத்திய சுற்று சூழல் அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் மனிதர்களை அச்சுறுத்தும் யானை, சிறுத்தை போன்ற விலங்குகளையும், பயிர்களை சேதப்படுத்தும் குரங்கு போன்ற விலங்குகளை கொல்லவும் அனுமதி அளிப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் முடிவுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.  “ விலங்குகளை கொல்வதில் மத்திய அரசு இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்” என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆனால், மேனகா காந்தியின் குற்றச்சாட்டை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளது. “ஏற்கனவே இருக்கும் சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.