9–வது ஐ.பி.எல். போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைப்பெற்றது. வீராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். டாஸ் வென்று முதல் பேட்டிங் பெங்களூர் மைதானத்தில் செய்வது வெற்றி பெறுவதற்கான ஒரு அறிகுறியாக கருதப்பட்டது.
டேவிட் வார்னரும், ஷிகார் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். இருவரும் அந்த அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்கள். தவான் 28 ரன்கள் எடுத்திருந்த போது சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய ஹென்றிக்ஸ் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனை அடுத்து கேப்டன் வார்னருடன் யுவராஜ் சிங் இணைந்தார். இந்த ஜோடி பெங்களூர் பந்து வீச்சை சிக்ஸர் மற்றும் பௌண்டரிகள் என ரன் குவித்தது. இந்த போடில் சதம் எடுப்பர் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் வார்னர் அரவிந் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதிரடியாக ஆடிய யுவராஜ் 38 ரன்கள் எடுத்து அவரும் அரவிந்த் பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனால் ஹைதராபாத் அணியின் ரன் ரேட் குறைந்தது. கடைசி மூன்று ஓவர்களில் அதிரடியாக விளையாடி ஆல்ரவுண்டர் பென் கட்டிங் ஹைதராபாத் 208 ரன்கள் குவிக்க உதவினார். பெங்களூர் அணியின் சிறப்பாக பந்து வீசிய அரவிந்த் 2 விக்கெட்களை வீழ்த்தினார். கிறிஸ் ஜோர்டான் மற்றும் வாட்சன் 8 ஓவர்களி 106 ரன்கள் கொடுத்தார் இது பெங்களூர் தோல்வி பெறுவதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது.
பெங்களூர் தொடக்க வீரர்களான கிறிஸ் கெயிலும் விராட் கோலியும் வெற்றியை நோக்கி களமிறங்கினார்கள் . இந்த IPL போட்டில் ரன்கள் கூவிக்காத கெயில் இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்ரன் வீசிய 4-வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். 25 பந்துகளில் அரை சதம் எடுத்தார் கெயில். பவர் ப்ளே ஓவர்களின் முடிவில் 59 ரன்கள் எடுத்தது பெங்களூர். பந்துவீச்சை கிறிஸ் கெயில் – கோலி ஜோடி அடித்து அட 9-வது ஓவரில் 100 ரன்களை பெங்களூர் கடந்தது. அதிரடி ஆட்டம் முலம் பெங்களூர் அணியை வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட கெயில், கட்டிங் பந்துவீச்சில் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடருந்து விராட் கோலி எதிர்பாராதவிதமாக 54 ரன்களில் ஸ்ரன் வசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே பெங்களூர் அணி எதிர்பார்க்கும் டிவில்லியர்ஸும் ( 5 ரன்கள்) அவுட் ஆனார்.
முஸ்தாபிஜுர் மற்றும் புவனேஸ்வர் குமார் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். 20 ஓவர்களின் முடிவில், பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
வார்னர் தலைமையில் விளையாடிய ஹைதராபாத் அணி, ஐபிஎல் சாம்பியன் ஆகியுள்ளது. அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவிய பென் கட்டிங், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். தொடர் நாயகன் விருது விராட் கோலிக்குக் கிடைத்தது.